சிசேரியன் குழந்தை -இன்று பல பெண்கள் சுகப்பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் அப்படி பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதினால் அது பலிக்குமா என பலருக்கும் தோன்றும் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். ஒரு குழந்தை இயற்கையாகவே இந்த பூமியில் பிறந்தால் தான் அதற்கு ஜாதகம் பலிக்கும் எனவும் சிசேரியன் மூலம் பெறப்பட்ட குழந்தைக்கு ,இது நாமாகவே கணக்கிட்ட நேரம் தானே அதனால் அந்த ஜாதகம் செல்லுமா […]
மகா சிவராத்திரி – மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் இந்த மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக பிரசித்தி பெற்றது. நாம் இதை ஆன்மீக வழியில் கடை பிடித்தாலும் இதற்கென்று வியப்பூட்டும் அறிவியல் காரணமும் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். சிவராத்திரியம் நிலவின் தத்துவமும் : நம் மனம் சந்திரனின் இயக்கத்தை வைத்து கணிக்கப்படுகிறது. மனிதனின் மனம் சந்திரனை போல் நிலையில்லாதது நமக்கு எண்ணங்கள் மாறி மாறி வருவதைப் போல் நிலவின் சுழற்சி கணக்கும் […]
House Cleaning-மங்களகரமான நாட்கள் அல்லது நல்ல நாட்களில் ஏன் வீடு சுத்தம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். வெள்ளி, செவ்வாய் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் வீடுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஏனென்றால் வெள்ளி செவ்வாய் என்பது மங்களகரமான நாளாகவும் இறைவழிபாட்டிற்குரிய நாளாகவும் கூறப்படுகிறது. இந்த மங்களகரமான நாளில் அந்நாளை வரவேற்கும் விதமாக முன்பே வீடுகளை சுத்தம் செய்து வைத்து விடவும். மங்களகரமான அந்த நாட்களை பூஜை செய்வதற்கும் இறைவழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். […]
Pratashnam-நம் நினைத்த காரியம் நடக்க வேண்டி கடவுளிடம் சில வேண்டுதல்களை வைப்போம், அதில் பிரதட்சணமும் ஒன்று. பிரதட்சணத்தில் நான்கு வகை உள்ளது. அது என்னென்னவென்றும் அதை செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பிரதட்சணம்: பிரதட்சணம் என்றால் சுற்றி வருதல் என அர்த்தம் ஆகும். சூரியனை மையமாக வைத்து மற்ற கிரகங்கள் சுற்றி வரும்போது அந்த சூரியனின் சக்தியை மற்ற கிரகங்களும் கிரகித்து அவைகளும் இயங்குகின்றது. இது போல்தான் நாமும் இறைவனை சுற்றி வந்து […]
பல சிவ ஆலயங்களிலும் மூலவருக்கு நேராக நந்தி பகவானை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். நந்தி சிறப்புகள், முக்கியத்துவமும் பற்றி என்பது பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நந்தீஸ்வரரின் சிறப்பு: சிவபெருமானின் யோக அக்கினியில் தோன்றியவர் தான் நந்தி என புராணங்கள் கூறுகிறது. நந்தி என்றால் வளர்தல், நிலை பெற்றவர் மற்றும் மகிழ்ச்சி எனப் பொருள். சதாகாலமும் மகிழ்ச்சியாக இருப்பவர் நந்தி பகவான். சிவபெருமானின் காவல் தெய்வமாகவும் நந்தீஸ்வரர் உள்ளார். சைவ சமயத்தின் முதல் குருநாதர் நந்தியே ஆவார். பதஞ்சலி […]
முதற்கண் கடவுளாக போற்றப்படுபவர் விநாயகர் தான். நாம் முதன் முதலில் எழுதத் துவங்கும் போது பிள்ளையார் சுழி போட்டுத்தான் துவங்குவோம் . அதுபோல் விநாயகர் வழிபாட்டில் தலையில் கொட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் வழிபாடு செய்வோம் அது எதற்காக என்றும் அதன் பலன்கள் என்ன வேண்டும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தோப்புக்கரணம் போடுவதன் காரணம் : அகத்திய முனிவர் சிவனிடமிருந்து காவிரி நதியை தன் கமண்டலத்தில்[நீர் பாத்திரம் ] வைத்து தென் திசையில் உள்ள குடகு மலையில் […]
முந்தைய காலங்களில் பூஜை அறைகளில் கண்ணாடி வைத்து வழிபடும் முறையும் இருந்து வந்தது. இந்த கண்ணாடியை ஏன் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடியின் தனித்துவம் : பொதுவாக கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன் வைக்கும் போது கண் திருஷ்டியையும் நீக்குகிறது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதை […]
நம் பலரும் அறிந்திறாத இந்த அபூர்வமான சோடசக்கலை நேரம் எப்போது வரும் என்பது பற்றியும் நம் எவ்வாறு அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். சோடச கலை நேரம்: சோடச கலை நேரம் என்பது திதிகளில் 16வது திதி என அகத்தியர் கூறுகிறார். நமக்கு தெரிந்தது 15 திதிகள் தான், பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள தேய்பிறை திதிதியும் பௌர்ணமியில் இருந்து வரும் வளர்பிறை திதிகளும் தான். அமாவாசை மற்றும் பௌர்ணமி […]
நம் இறைவனை வழிபடும் முறையில் விரதமுறையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் ஏன் இருக்கிறோம், விரதம் இருக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் செய்யக்கூடாதது எது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விரதத்தின் ஆன்மீக காரணம் : எந்த ஒரு கடவுளும் தன்னை வருத்திக் கொண்டு தான் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால் நாம் தான் இறைவனின் மீது கொண்டுள்ள அதீத பக்தியாலும் அன்பினாலும் அதை வெளிப்படுத்தும் விதமாக விரதம் […]
நம் கோவிலுக்கு சென்று வந்த முழு பலனையும் அடைய வேண்டும் என்றால் கோவிலின் தல விருட்சத்தை வழிபாடு செய்ய வேண்டும். தல விருட்சத்தின் சிறப்புகள் மற்றும் அதை ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் அறிந்து கொள்வோம். ஒரு ஆலயத்திற்கான சிறப்பு மற்றும் அடையாளம்: ஒரு ஆலயம் என்றால் அங்கு மூர்த்தி, தலம் , தீர்த்தம், விருட்சம் ஆகியவை இருக்கும். மூர்த்தி என்றால் அங்குள்ள தெய்வமாகும். தலம் என்றால் தெய்வம் அமைந்துள்ள ஊராகும். தீர்த்தம் […]
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது மிக மகிழ்ச்சியான உன்னதமான காலம் எனலாம். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று எத்தனை மாதங்கள் வரை கோவிலுக்கு செல்லலாம் என்றும் பெரியவர்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது என கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. பெரியவர்கள் ஏன் கர்ப்ப காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூறினார்கள் தெரியுமா? முற்காலத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரமும் செல்ல வேண்டும் மேலும் செல்லும் வழிகள் […]
நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வளர்பிறையின் சிறப்புகள் வளர்பிறையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். திருமணங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். புதிதாக ஏதேனும் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் வளர்பிறை காலத்தில் உயிர்ப்பு […]
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தானம் பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் . தர்மம் தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது […]
நேர்த்திக்கடன் என்பது ஒரு பக்தன் இறைவனிடம் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டால் தங்களுக்கு இதை செய்கிறேன் என பிரார்த்தனை செய்வதாகும், இதை சில காரணங்களால் மறந்து விடுகிறோம் அல்லது நாம் இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு நாட்டிற்கோ அல்லது இடத்திற்கோ சென்று விட்டோம் என்றால் அந்த நேர்த்திக்கடனை எவ்வாறு செலுத்துவது மற்றும் மறந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும்… நேர்த்திகடன் ஒவ்வொருவரின் மனப்பக்குவத்தை பொறுத்து மாறுபடும். […]
இன்று பலரும் கால்களில் கருப்பு கயிறு கட்டுகின்றனர் இது சரியா மற்றும் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என்றும் ஒரு சிலருக்கு கருப்பு நிறம் சேராது என்று கூறுவார்கள் அவர்கள் என்ன செய்வது போன்ற சந்தேகங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. எத்தனை வயதானாலும் இந்த கண் திருஷ்டி சுலபமாக ஒருவரை தாக்கி விடும். இந்த திருஷ்டியை போக்க பல வழிகள் உள்ளது அதில் ஒன்றுதான் இந்த காலில் கருப்பு கயிறு கட்டும் முறை. கருப்பு கயிறு கட்டுதலின் […]
திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும் குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை […]
வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமாகும். முந்தைய காலத்தில் வீடு கட்டுவதற்காக ஜாதகம் எழுதி அதற்கான ஆயுட்காலமும் எழுதப்பட்டது இது காலப்போக்கில் மாறி வாஸ்து மட்டுமே பார்க்கப்படுகிறது. பஞ்சபூதங்களின் சரியான சேர்க்கையே வாஸ்துவாக அமைகிறது. இந்த பஞ்சபூதங்களும் ஒரு வீட்டில் அமைந்து விட்டால் அந்த வீட்டில் அனைத்துமே சரியாக இருக்கும். இதில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் உதாரணமாக நீரினால் ஒரு பிரச்சனை என்றால் அந்த வீட்டில் பண வரவு பாதிக்கப்படும். நீரை நாம் […]
சகுனம் என்பது ஒரு முன் அறிகுறி ஆகும், இது நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது இதை ஒரு சிலர் மூடநம்பிக்கை என்றும் கூறுவர். சகுனத்தில் நல்ல சகுனம், கெட்ட சகுனம் என உள்ளது இவற்றைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முன்னோர்கள் , குலதெய்வங்கள் ,தேவதைகள் என, நல்ல சக்திகள் நமக்கு நடக்கவிருக்கும் தீயவற்றை முன்கூட்டியே உணர்த்தக்கூடியது சகுனம். அதாவது ஒரு ஒரு மணி நேரத்தில் நடக்க இருக்கும் விபத்தை முன்கூட்டியே அறிவுறுத்தி அதை […]
ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் படங்கள் வைத்து வழிபடுவது ஒரு முறை, அதைத் தாண்டி விக்ரகங்கள் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவதும் ஒரு முறை தான். படங்களை வைத்துக் கொள்வதற்கு அளவு இல்லை ஆனால் விக்ரகங்களை நம் வீட்டில் வைத்து வழிபடுவதற்கு அளவும் சில முறைகளும் உள்ளது அதைப்பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். விக்கிரங்ககளின் வகைகள் பொதுவாக விக்கிரகங்கள் இறைத்தன்மையை ஈர்க்கும் ஆற்றலை கொண்டுள்ளது. இது அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். விக்கிரகங்கள், கருங்கல், பஞ்சலோகம் […]