சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட உள்ளது. அதன்படி, இந்த மாத இறுதியில் படத்தை வெளியிடப்படலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்கையில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணமும் வெளியாகியுள்ளது. அதாவது, ‘இரவு, பகலாக பின்னணி இசையமைக்கும் […]
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் முதல் சிங்கிளான “Rise Of Dragon” பாடல் வெளியானது. “LOSS எல்லாமே MASS-ஆ மாறும்” என்கிற வரிகள் அடங்கிய ஒரு சூப்பர் பெப்பி பாடலுக்கு பிரதீப் ரங்கநாதன் மற்றும் கௌதம் மேனன் நடனமாடி வைப் செய்துள்ளனர். ‘ரைஸ் ஆஃப் டிராகன் ‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை அனிருத், நதிஷா தாமஸ் மற்றும் எல் ஃபெ கொயர் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளனர். மேலும் […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில், ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ராம் சரண் தவிர படத்தில் கியாரா அத்வானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, […]
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, ‘திரு மாணிக்கம்’ என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி தவிர பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கிரேசி, சாம்ஸ், ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார், அறிக்கை வாயிலாக தனது […]
சென்னை : பாலிவுட்டில் அக்லி, ரைபிள் கிளப், கென்னடி, உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய அனுராக் காஷ்யப் தற்போது நடிப்பிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற மகாராஜா படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்கத்தை விட்டு விட்டு கதைக்கு சம்பந்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவது தான் அவருக்கு பிடிக்கிறது என்றே சொல்லலாம். இருப்பினும், பாலிவுட்டில் தனக்கு அப்படியான படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை எனவே, […]
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து ஓய்வில் இருக்கும் சிவராஜ்குமார், தற்போது முழுவதும் குணமாகி விட்டதாக அவரின் மனைவி கீதா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர், ஜெய்லர் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்திருப்பார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சமீபத்தில், அவருக்கு அறுவை […]
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். இதில், நிலவு என்மேல் ஏனாதி கோபம் பிப்ரவரி ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அவர் இயக்கி வரும் மூன்றாவது படமான இட்லி கடையின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக்கில் ராஜ்கிரணுடன் இளைஞராக ஒரு லுக், நடுத்தர வயதில் […]
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை நாட்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது, இருவரும் தங்கள் துபாய் பயணத்தின் ஒரு பகுதியாக புத்தாண்டை கொண்டாடி தீர்த்துள்ளனர். அதில் சிறப்பு என்னவென்றால், அங்கு அவருடன் நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா பிர்ஜே ஆகியோர் இணைந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். Only Love 🫶🏻 all around 💓 […]
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2025 ஜனவரி மாத இறுதியில் வெளியீடு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ள நிலையில், அதே தேதியில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்வதற்கு அந்தந்த படங்களின் தயாரிப்பு […]
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலனி” படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இப்படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 7ஜி ரெயின்போ காலனி வெளியாகி கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு, புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் […]
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை மாலை 5.04க்கு வெளியாகிறது. இந்த அறிவிப்புடன், ராம் சரண் இடம்பெறும் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரசியல் கலந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை ‘டாப்’ என்ற பெயரில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. […]
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு முக்கியமான காரணமே விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது தான். கடைசியாக கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தான் அஜித்தின் துணிவு படம் வெளியானது. எனவே, ஒரு வருடங்கள் மேல் ஆகியும் இன்னும் அஜித் படம் வரவில்லை என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று […]
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பபுத்தாண்டை முன்னிட்டு மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதைப்போல, நடிகர்கள் பலரும் தங்களுடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாட்சா படத்தின் வசனத்தை […]
சென்னை : அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படம் முதலில் 2024 தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் படக்குழு அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படத்திற்கு பிறகு அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முடித்து முதலில் 2025 பொங்கல் ரிலீஸ் என போஸ்டர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ். […]
சென்னை : அஜித் நடித்து முடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு தான் வருகிறதா?அல்லது மே மாதத்திற்கு தள்ளி செல்கிறதா? என அஜித் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். அதற்கு முக்கியமான காரணமே விடாமுயற்ச்சி படத்தின் ரிலீஸ் தேதி முன்னதாக அவர் நடித்த மற்றோரு படமான குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக விடாமுயற்சி படத்திற்கான டீசர் வெளியாகும்போது படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]
சென்னை : சின்னத்திரையில் கலக்கி கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து, இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவரான ஹேம்நாத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஹேம்நாத் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுதலையும் செய்யப்பட்டார். இந்த சூழலில், சித்ராவின் தந்தை காமராஜ் (64) சென்னை திருவன்மியூரில் […]
மதுரை: பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி தற்போது நாயகனாக ஜொலிக்கிறார். கடைசியாக விடுதலை திரைப்படத்தில் நடித்திருக்கும் சூரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு இவர் நடிப்பில் சிறந்து விளங்குவது போல், தொழிலிலும் சிறந்து விளங்குகிறார். நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் உணவகங்கள் பல்வேறு இடங்களில் ‘அம்மன்” உணவகம் என்ற பெயரில் ஓட்டல்களை நடத்தி வருகின்றன. மதுரையில் குறிப்பாக முக்கிய சந்திப்புகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், நரிமேடு […]
சென்னை : அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே சமயம், மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம்ஜெஞ்சர் படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கு படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானால் கூட படத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். எனவே, இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதன் காரணத்தால் இந்த நேரத்தில் படத்தை வெளியீட்டால் […]
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி மற்றும் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படம் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே, இரண்டு படக்குழுவும் தீவிரமான ப்ரோமோஷனில் இறங்கியுள்ளது. குறிப்பாக, விடாமுயற்சி படத்தில் இருந்து முதல் பாடலான Sawadeeka பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. அதே போல, வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா பாலா 25 […]
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட ஆமாங்க… தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ‘திரு.மாணிக்கம்’ என்கிற படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்திருக்கிறார். இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம் படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் […]