சியான் விக்ரமின் மகன் துருவ் கிருஷ்ணா தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவர் தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.ஆகஸ்ட் 25 தெலுங்கில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் சுமார் 42 கோடி வரை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே வசூல் செய்துள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் விஜய் தேவேர்கொண்டா மற்றும் சாலினி நடிக்க,சந்தீப் ரெட்டி வன்கா இயக்கியுள்ளார்.தமிழில் துருவ் […]
சென்னை: நடிகை காஜல் அகர்வால் பெரியம்மா ஆகப் போகிறாராம். நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அக்கா வழியில் நடிகையானார். ஆனால் அவருக்கு காஜல் போன்று மார்க்கெட் இல்லை. இதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில் அதிபர் கரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது நிஷா கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது. நிஷா கர்ப்பமாக இருப்பதை காஜல் அகர்வால் உறுதி செய்துள்ளார். தான் விரைவில் பெரியம்மா ஆகப் […]
கோலிவுட் மற்றும் டோலிவுட்டின் தற்போதைய பரபரப்பான எதிர்ப்பார்ப்பு சமந்தா, நாக சைத்தன்யா திருமணம்தான். இவர்களது திருமணம் கோவாவில் அக்டோபர் 6, 7 தினங்களில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க இருக்கிறது. எளிமையாக நடக்கவிருக்கும் திருமணம் என்று கூறப்படும் இந்நிகழ்ச்சிக்கு மொத்தம் 150 அழைப்புகள் மட்டும் தான் விநியோகிக்கப்பட்டுள்ளதாம். ராம் சரண், ராணா, வெங்கடேஷ், ராகுல் ரவீந்திரன் அவரது குடும்பம் ஆகிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவர்களது திருமணச் செலவு மட்டும் ரூ. 10 […]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த படம் ஸ்பைடர். கடந்த 27-ந்தேதி திரைக்கு வந்த இந்த படம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல ஓப்பனிங்கே கிடைத்து வருகிறதாம்.அந்த வகையில், ஸ்பைடர் படம் திரையிட்ட முதல் நாளில் ரூ. 51 கோடி ரூபாய் வசூலித்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதையடுத்து இரண்டாவது நாள் ரூ. 21 கோடி வசூலித்துள்ளதாம். ஆக, இரண்டு நாட்களில் ஸ்பைடர் […]
தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடித்துள்ள படம் பிஎஸ்வி கருட வேகா. பிரவீண் இயக்கியுள்ள இந்த படத்தில் டாக்டர் ராஜசேகருடன் பூஜாகுமார், கிஷோர், ஸ்ரத்தா தாஸ், சன்னி லியோன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதன்முறையாக ஒரு அழுத்தமான டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பூஜாகுமார்.மேலும், இந்த படத்தில் ஒரு அயிட்டம் பாடலில் டாக்டர் ராஜசேகருடன் இணைந்து நடனமாடியிருக்கிறார். பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். ஸ்ரீசரன் பகாலாவின் இசையில் உருவான அந்த பாடலை மும்பையில் பிரமாண்ட செட் போட்டு […]
மலையாளத்தில் உருவான படம் பிரேமம். நிவின் பாலி நாயகனாக நடித்த அந்த படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன் என மூன்று நாயகிகள் அறிமுகமானார்கள். அந்த மூன்று பேருமே அந்த படத்திற்கு பிறகு பிசியான நாயகிகள் ஆகி விட்டனர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்கள்.இவர்களில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்த சாய் பல்லவி மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். ஒரே படத்தில் தென்னிந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களை […]
2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் சாமி. இந்த படம் சூப்பர் ஹிட்டானது. அந்த சமயத்தில் அடுத்தபடியாக ரஜினி படத்தை ஹரி இயக்குவார் என்றெல்லாம் பேசப்பட்டது. அந்த அளவுக்கு மாஸ் ஹிட்டாக அந்தபடம் அமைந்தது. அதையடுத்து தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களாக இயக்கி வந்த டைரக்டர் ஹரி, தற்போது 14 ஆண்டுகளுக்குப்பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.இந்த படத்திலும் சியான் விக்ரம் ஆறுச்சாமியாகவே நடிக்கிறார். முந்தைய கதையின் தொடர்ச்சியாகவே சாமி-2 படக்கதையும் அமைந்திருப்பதாக […]
சியான் விக்ரம் நடிப்பிலும் ஹரி இயக்கத்தில் உருவாகபோகும் சாமி 2 படத்தின் ஷூட்டிங்கானது ஆயுத பூஜை அன்று துவங்கப்பட்டது..அந்த பூஜையில் நடிகை கீர்த்தி சுரேஷ்,நடிகர் பாபி சின்ம்ஹா,இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்
பாலிவுட் திரையுலகில் நடிகை வித்தியா பாலனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கோலிவுட்டில் எப்படி நயன்தாரா மிகச் சிறப்பான வகையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்தெடுத்து நடித்து வருகிறாரோ அதே போல் பாலிவுட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைத் தேர்தெடுத்து நடித்து வருகிறார் வித்யா பாலன். இந்நிலையில் வித்யா பாலன் முக்கியமான ஒரு சந்திப்பிற்காக மும்பையில் தன்னுடைய காரில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரே வந்த கார் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து, வித்யா பாலன் வந்த […]
‘தர்மதுரை’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சீனுராமசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்திற்கு ‘மாமனிதன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்று சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. ஆனால் மாமனிதன் படம் துவங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.விஜய்சேதுபதி கைவசம் இப்போது நிறைய படங்களில் நடித்து வருவதால ‘மாமனிதன்’ படத்திற்கு உடனடியாக கால்ஷீட் கொடுக்கவில்லையாம். எனவே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க காலதாமதம் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக மாமனிதன் படத்துக்கு […]
சியான் விக்ரமின் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கானது சமீபத்தில் தான் துவங்கியது. இப்படத்தில் ஸ்கெட்ச்,துருவநட்சத்திரம் படத்தில் உள்ள முக பாவனைகளை விட இந்த படத்தில் மிகவும் மிடுக்கான இளைஞனாக தோற்றமளிக்கிறார் சியான் விக்ரம்… இப்படத்தை ஹரி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.மேலும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக த்ரிஷா,கீர்த்தி சுரேஷ்நடிக்கின்றனர்.அவர்களுடன் தம்பிராமையா,சூரி,பாபி சிம்கா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இப்படை வெல்லும். இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்துள்ளது. இமான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் […]
நடிகை அனுஷ்கா ஷர்மா தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.பின்னர் அவர் கடல்கரையில் இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.அவர் சுத்தம் செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் இன்டர்நெடில் வெளியிடுள்ளார்.
செல்போனை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு பேசுகிறார் பத்ரி வெங்கடேஷ். அதர்வாவை வைத்து பாணா காத்தாடி கொடுத்த இயக்குநர். அடுத்த படத்தின் டைட்டிலே கிறங்கடிக்குது. செம போத ஆகாத. என்ன தலைவா, இப்படி இறங்கிட்டீங்க? மது, மாது எல்லாமே போதை வஸ்துதான். போதை ஏறினால் புத்தி கெட்டுடும். அது தடுமாறினா தப்பான முடிவு எடுப்போம். எந்த போதைனாலும் அது சிலமணி நேரத்துல தெளிஞ்சிடும். ஆனா, அந்த டைம்ல நாம எடுத்த முடிவு, நம்ம வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரும். […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். அவர்களுடன் உரையாடிய கமல் கோல்டன் டிக்கெட்டில் சினேகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவர் கிளம்பும்போது சுஜா அவரிடம் ஒரு நிமிடம் எனக்காக காத்திருக்க வேண்டும் என்றார். உள்ளே போய் ஜோக்கர் குல்லா மாட்டிக்கொண்டு வந்து கமல் முன்பு தன்னுடைய சிவக்குமார் அத்தானுக்கு பிறந்தநாள் வருகிறது. அவர் தான் என்னுடைய ஜோக்கர் என்று கூறினார். அதற்கு, சிவக்குமார் இங்கே உங்களுடைய ஜோக்கர் நிற்கிறார் என்று கமல் கூறினார்.
BiggBoss நிகழ்ச்சியில் கடந்த வாரம் வையாபுரி அவர்கள் வெளியேற்றப்பட்டார். பொதுவாக எலிமினேட் ஆகுபவர்கள் கமல்ஹாசனுடன் கலந்துரையாடிவிட்டு தான் செல்வார்கள். அப்படி வையாபுரியும் கமல்ஹாசனுடன் சிறுது நேரம் கலந்துரையாடினார். அப்போது வையாபுரி, அண்மையில் தன் குடும்பத்துடன் ரஜினி அவர்களை நேரில் சந்தித்தேன். அப்போது நான் உங்களுடன் நடித்த படங்களை பற்றி அவர் பேசினார் என்று கூறினார். உடனே கமல்ஹாசன் ரஜினி என்னுடைய படங்களை பார்த்தது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார்.
அஜித்தின் விவேகம் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பில் வெளியாகி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அஜித் நடித்த எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாரானதோடு பெரிய தொகைக்கும் வியாபாரம் ஆகியிருந்தது. இந்த நிலையில் அஜித்தின் விவேகம் பட வியாபாரத்தை விட விஜய்யின் மெர்சல் படம் 30% அதிக வியாபாரம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் மெர்சல் பட டீஸர் […]
BiggBoss நிகழ்ச்சியில் இதுவரை சண்டை, விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் என நிறைய பார்த்திருப்போம். ஆனால் 100 நாட்கள் நெருங்க நெருங்க பயங்கரமான சண்டைகள் வரும் என்பது போல் தெரிகிறது. அதன் முதல் கட்டமாக புதிதாக வந்த புரொமோவில் சுஜா மற்றும் சினேகனிடையே சண்டை ஏற்படுகிறது.சுஜா என்னை தொடாதீர்கள் என்று கூற, அதற்கு சினேகன் பிறகு எப்படி விளையாடுவது என்பன போல ஆரவ் மற்றும் பிந்து மாதவியிடம் கூறுகிறார். ஆரவ்வும் விளையாடும் போது திடீரென்று வார்த்தையை விடுகிறார்கள் என்கிறார்.
சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.
தளபதி விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளது. படத்தின் டீஸர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள நிலையில், இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெர்சல் படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் “சிஎஸ்கே. .சிஎஸ்கே..” என தொடர்ந்து போட்டி முழுவதும் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.