சென்னை : பிரபல நடிகர் ராஜேஷ் (75) சற்றுமுன் காலமானார். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். பிரபலங்களுடன் தனது நினைவுகளை கட்டுரையாக எழுதி வந்த 75 வயதான ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு இன்று காலமானார். ராமாபுரத்தில் உள்ள வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, நடிகர் ராஜேஷ் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் […]
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அதனுடைய அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. ஒரு படத்தில் பாடல் கூட இல்லாமலும் ஒரே இரவில் நடக்கும் காட்சிகளை வைத்து இவ்வளவு பெரிய ஹிட் படம் கொடுக்க முடியுமா? என லோகேஷ் கனகராஜ் மற்ற இயக்குனர்களை யோசிக்க வைத்தார் என்று சொல்லலாம். முதல் பாகம் 2019-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த நிலையில், அடுத்த பாகம் […]
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார். தயாரிப்பாளராக வனிதா இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தினை வனிதா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் […]
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சென்னையில் நடைபெற்ற ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான சரத்குமாருடனான நகைச்சுவையான உரையாடலைப் பகிர்ந்து, கலகலப்பான பேச்சால் கூட்டத்தை மகிழ்வித்தார். இந்த விழாவில், சரத்குமாரை “அண்ணன்” என்று அன்பாக அழைத்து, அவருடனான நெருக்கமான நட்பை வெளிப்படுத்தினார். மேலும், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியானபோது விமான நிலையத்தில் நடந்த ஒரு உரையாடலை நினைவு […]
சென்னை : சூர்யாவுக்கு இந்த படமாவது பெரிய கம்பேக் படமாக இருக்கும் என பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய காரணத்தாலும் படத்தில் சூர்யாவின் லுக் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்த காரணத்தால் படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் டிரைலரையும் படக்குழு படம் வெளியாவதற்கு முன்பு வெளியிட்டிருந்தது. அந்த டிரைலரை பார்த்த பலரும் படத்திற்கு ஆவலுடன் காத்திருந்த […]
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ”Ace” திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி தவிர, ருக்மணி வசந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்கும் இந்த படம் ஒரு காதல், க்ரைம் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தை ‘ஒரு நல்ல நாள் பாட்டு சொல்றேன்’ புகழ் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். படத்தை இயக்கிய ஆறுமுககுமார் தனது 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் ஏஸ் […]
டெல்லி : ‘Son of Sardaar’, ‘Jai Ho’ 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் (54) காலமானார்.நடிகர் விந்து தாரா சிங் அவரது மரணத்தை உறுதிப்படுத்தி இரங்கல் தெரிவித்துள்ளார். முகுல் தேவ், சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், நேற்று இரவு (23 ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி முகுல் காலமானார் என்று கூறப்படுகிறது. […]
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனது 50 திரைப்படத்தில் சிம்பு இரு வேடங்களில் நடிக்கிறார். அதன்படி Behindwood உடனான ஒரு நேர்காணலில் சிம்பு கூறியதாவது, இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அதை எப்படி அணுகுவது என்பது குறித்து கமல்ஹாசன் சாருடன் கலந்துரையாடினேன். இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கும்போது தான் ஒரு நடிகரின் உண்மையான […]
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களாக அறிக்கைகளை வெளியிட்டனர். ஒருவருக்கொருவர் மீதான விமர்சனங்கள் அடுத்தடுத்த விவாதங்களாக மாறியது. ஏற்கனவே, அவர்களின் விவாகரத்து பிரச்சினை நீதிமன்றத்தின் நிலவையில் உள்ளது. இந்த நிலையில், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோர் தங்கள் விவாகரத்து வழக்கு குறித்து எந்த பொது அறிக்கைகளையோ அல்லது பத்திரிகை வெளியீடுகளையோ வெளியிட […]
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு இணையத்தில் பெரும் விமர்சனத்தை தூண்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் தமன்னாவுக்கு மற்றொரு தொழில்முறை மைல்கல்லாக இருக்கலாம் என்றாலும், கன்னட நடிகர்களை விட தமன்னாவை தேர்ந்தெடுத்ததற்காக கர்நாடக அரசு மீது சமூக ஊடக பயனர்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆம், கர்நாடகத்தை சேர்ந்த நடிகர், […]
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே எப்போதும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் போது, நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான் மும்பையின் ஆடம்பரப் பகுதியான பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். இந்த நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன் தினம் (மே 20) இரவு சுமார் 7:15 மணியளவில், குமார் சிங் என்ற நபர் பாதுகாப்பைத் […]
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி) வெளியாக இருந்த நிலையில், தியேட்டர் ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் சண்முக பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ”அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு […]
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு KALAM: The Missile Man of India’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஆதிபுரூஷ்’ படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக இப்படம் உருவாக உள்ளது. ராஞ்சனா, ஷமிதாப் அத்ராங்கி ரே மற்றும் தேரே இஷ்க் மே ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷின் […]
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணையில் உள்ளது. முன்னதாக, இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேன்மொழி, இரு தரப்பினரையும் சமரச பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்டார். இதுவரை மூன்று முறைக்கு மேல் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன, ஆனால் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. […]
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் கவுரவ டாக்டர் பட்டத்திற்கு (Honoris Causa) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரையுலகில் அவரது மகத்தான சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்த கவுரவம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம், வரும் ஜூன் 14, 2025 அன்று நடைபெறவுள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படவுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு பல துறைகளில் சிறந்து […]
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே வைத்துள்ளார். தற்பொழுது, கார் பந்தயத்தில் பங்கேற்க பிரேசில் சென்ற நிலையில், இமோலா நகரில் உள்ள பிரேசில் வீரர் அயர்டன் சென்னாவின் சிலைக்கு அஜித் குமார் மரியாதை செலுத்தினார். அயர்டன் சென்னாவின் சிலையை முத்தமிட்டும், முழங்காலிட்டும் வணங்கினார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் தன்னை நேசிப்பவர்களுக்கும், தான் நேசிப்பவருக்கும் அஜித் குமார் உண்மையானவர் என கூறி வருகின்றனர். […]
சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. தனது மனைவி கட்டுப்படுத்துவதாகவும், முதுகில் குத்தப்பட்டதாகவும் நடிகர் ரவி சமீபத்தில் கூறியதைத் தொடர்ந்து, நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தற்போது ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 3-வது நபரால் தான் தங்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கணவரை கட்டுப்படுத்தும் மனைவி என […]
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் – சாய் தன்ஷிகா காதலிப்பதாகக் கூறினார். சாய் தன்ஷிகா நடித்த ‘யோகி டா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அடுத்த நொடியே வெட்கத்தில் தலைகுனிந்து சிரித்தார் விஷால். இதைப் பார்த்த சாய் தன்ஷிகாவும் வெட்கத்துடன் சிரிக்க, மேடையே கை தட்டி உற்சாகம் செய்தனர். இதனையடுத்து தாங்கள் வருகிற ஆக. 29-ல் திருமணம் […]
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும் சாய் தன்சிகாவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவருக்கொருவர் தங்கள் காதலை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரது திருமண தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை சாய் தன்சிகாவின் யோகி டா ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி, ‘யோகி டா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஒன்றாக […]
சென்னை : நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கும் இடையிலான விவாகரத்து சண்டைக்கு மத்தியில், ரவி மோகன் பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் டேட்டிங் செய்வதாகவும் வதந்தி பரவி வருகிறது. ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் மாறிமாறி ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். முன்னதாக, ரவி மோகன் பற்றி ஆர்த்தி ரவி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதற்கு பதில் கொடுத்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதன் […]