சென்னை : சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுனர்களின் படைப்புகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், கலை பண்பாட்டுத் துறை மற்றும் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் “சென்னையில் […]
சென்னை : நாளை (ஆகஸ்ட் 02-08-2024) சென்னை மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சென்னயில் உள்ள வடசென்னை பகுதியில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம். வட சென்னை வீரராகவன் சாலை, NT சாலை, ஃபிஷிட் துறைமுகத்தின் ஒரு பகுதி, செரியன் நகரில் 1 முதல் 4 வது […]
சென்னை: கடந்த 2017இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்றனர். தமிழகத்தில் புகையிலை, குட்கா பயன்பாடு அதிகரித்துள்ளது எனும் குற்றசாட்டை தமிழக சட்டப்பேரவையில் குறிப்பிட குட்கா கொண்டுசெல்லப்பட்டதாக கூறினர். சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்றதாக அப்போதைய சட்டமன்ற உரிமை மீட்பு குழு , மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பதில் அளிக்க வேண்டும் என […]
சென்னை: கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து முடித்து வைத்திருந்தது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது. […]
சென்னை : மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த 27ஆம் தேதி சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்று அங்கிருந்த்து கடல்வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்த உள்ளதாக மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சென்னை கிளாம்பாக்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர் பெயர் பைசல் ரகுமான் என்பதும், அவரிடம் […]
சென்னை : தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பெறுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகள் சட்டவிரோதமாக பேராசியர்கள் கணக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் முன்னதாக நடத்திய ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 350க்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வெவ்வேறு காலகட்ட போட்டோக்கள், […]
சென்னை: அண்மையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்துக்கு என்று தனியாக சிறப்பு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை […]
சென்னை: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மக்கள் வாகன சத்தங்கள் மறந்து மகிழ்ச்சியாக இருக்க கடந்தாண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு “ஹாப்பி ஸ்ட்ரீட் (Happy Street)” ஆகும். இந்த நிகழ்வு நடைபெறும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த வாகனத்திற்கும் சாலையில் அனுமதி இல்லை. அப்போது குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். அவ்வாறு, வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னை அண்ணாநகர் பகுதியில் HAPPY STREET நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான போக்குவரத்து மாற்றம் பற்றிய […]
சென்னை: வங்கதேச போராட்டத்தால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்த 42 தமிழக மாணவர்கள் அரசு உதவியுடன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். வங்கதேசத்தில் அந்நாட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சந்ததிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டதிருத்தத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிராக அந்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், வங்கதேசத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் […]
சென்னை: போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என கூகுள் மேப்பில் குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். பிரபல ஆன்லைன் இயங்குதளமான கூகுள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு பிரிவு கூகுள் மேப். இந்த கூகுள் மேப்பில் அவ்வப்போது புதுபுது அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் நாம் எங்கு போக வேண்டுமோ அதற்கான பாதையை மட்டுமே காண்பித்தது. தற்போது எந்த பகுதியில் டிராபிக் அதிகமாக இருக்கும், ஹோட்டல் , பெட்ரோல் பங்க் முதல் […]
சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை திருமதி.ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாக ரீதியிலும் பெயரை மாற்றம் செய்துள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில், கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஸ் என முன்னாள் அரசியல் பிரமுகர்களும் கைது […]
சென்னை: நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை , தாம்பரத்தில் 55 மின்சார ரயில்கள், தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் ரயில் நிலைத்தில் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜூலை 23) முதல் ஆகஸ்ட் 14 வரையில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கி வரும் 55 மின்சார ரயில்கள் மேற்கண்ட காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே […]
சென்னை: சாலையோரம் சுற்றித்திரிந்த ஒரு நபரின் வாழ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றியுள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தினமும் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல இன்றும் காலையில் சென்னை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக ஒரு முதியவர் சாலையோரம் இருந்த பிளாஸ்டிக், பேப்பர் போன்றவற்றை சேகரித்து அதனை வைத்து வாழ்ந்து வந்துள்ள அந்த நபர் அமைச்சரை பார்த்ததும் வணக்கம் கூறியுள்ளார். அப்போது […]
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கூறி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது நடவடிக்கைகளின் போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அப்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை […]
சென்னை: கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்ட விசாரணை நடைபெற்று , தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று, பிற்பகல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு […]
சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேசிய கட்சியின் மாநில தலைவர் தலைநகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் […]
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என திமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட்டு அவரே இன்று நடைபெற்ற திமுக கூட்டத்தில் விளக்கம் அளித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில் இன்று (ஜூலை 20) திமுக இளைஞரணி தொடங்கி 44 ஆண்டுகள் முடிந்து 45ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் […]
சென்னை: அம்மா உணவகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சன அறிக்கைகையும், ஓர் வீடீயோவையும் வெளியிட்டுள்ளார். நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுகளை சுவைத்தும், அங்கு சாப்பிட வந்தவர்களிடம் உணவின் தரம் பற்றி விசாரித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள பொருட்களின் இருப்பு பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை […]
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அரசியல் பிரமுகர்கள், அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன் ஆகியோர் பாஜக, அதிமுக, தமாகா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னையை அடுத்த பெரம்பூரில் பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்ட்டார். செம்பியம் பகுதி காவல் நிலையத்தில் பதியப்பட்ட இந்த கொலை வழக்கில் முதற்கட்டமாக பொன்னை பாலு, குன்றத்தூர் திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் காவல்துறையால் கைது செய்ப்பட்டனர். இதில் கடந்த ஜூலை […]
சென்னை: தமிழகத்தில் உள்ள தொழில்முனைவோர் இணையத்தின் வாயிலாக தங்கள் வணிகத்தை மேம்படுத்தவும், தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தவும் உள்ள வழிமுறைகள் பற்றி தமிழக அரசு பயிற்சி அளிக்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் முன்னதாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழக செய்தி தொடர்பு கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் […]