பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மனவர்களுக்கு இலவச கல்வி என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் http://unom.ac.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் 2010-2011 கல்வியாண்டிலிருந்து “மெட்ராஸ் யுனிவர்சிட்டி […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில்,சென்னையில் 8-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் 7-வது நாளாக எந்த மாற்றமுமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நாளை திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்வு நாளை (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில்,இன்று கொரோனா தொற்று இரண்டாயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் தற்போது 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் 6 மாணவர்களும் தனிமைப் படுத்தப்பட்டுளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக,சென்னை ஐஐடியில் இதே போல் […]
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடக்கம். தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கவுள்ளது. இன்று முதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று மருத்துவக் […]
இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் இன்று (மே 23 ஆம் தேதி) முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.மேலும்,இருசக்கர வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி,சென்னையில் இன்று முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,சென்னையில் […]
சென்னையில் மே 25-ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் விழாவில் அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னையில் போலிஸாரின் தடையை மீறி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார். சென்னையில் போலீசாரின் அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர்.இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விசிக-வின் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு […]
இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் 26-ஆம் தேதி சென்னை வருகிறார். இதனையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்தில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் அடையாறு செல்லும் அவர், அங்கிருந்து நேரு ஸ்டெடியத்திற்க்கு சென்று புதிய […]
சட்டவிரோதமாக மதுபானக் விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் எச்சரிக்கை. சென்னையின் மையப்பகுதியான கோயம்பேடு அருகே வி.ஆர்.மால் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடை, செல்போன் மற்றும் நகைக்கடை என அனைத்து வசதிகளும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவதுண்டு. அதிலும், விடுமுறை நாட்களில் இந்த வணிக வளாகம் கூட்ட நெரிசலாக தான் காணப்படும். இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் நான்காவது தளத்தில் பிரேசிலை சேர்ந்த […]
நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் […]
தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை […]
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. சென்னையில் வரும் 23 தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க 312 இடங்களில் அதிரடி சோதனை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் ஒட்டிச்செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை […]
வடகிழக்கு பருவமழையின் போது சென்னை மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையில்,வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல்,நகர்ப்புற திட்டமிடல்,பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள மேலாண்மை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில்,திருப்புகழ் IAS குழு அளித்த அறிக்கையின் படி சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை. சென்னையில் கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரங்கநாதன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உத்தரவிட்டது. கடந்த 2016ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ரங்கநாதன் என்பவர் மீது […]
இந்தியாவிலேயே முதல் முறையாக முதியவர்களுக்கான மருத்துவ சேவை மையம் சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்படவுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக சென்னையில் சைதாப்பேட்டை பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் மூத்தோருக்கான மருத்துவமனை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நிலையில்,கடந்த ஆட்சியாளர்கள் அதனை தொடங்கி வைக்க சுணக்கம் காட்டினார்கள்.இதனையடுத்து,கொரோனா பேரிடர் காலத்தில் அம்மருத்துவமனை தற்காலிக கொரோனா மையமாக செயல்பட்டது. ஆனால்,கடந்த […]
விசாரணை கைதி கொலை வழக்கில் இருவரை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கஞ்சா வழக்கில் கைதான விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காவலர்களை கைது செய்யுமாறு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் தமிழக காவல்துறை பரிந்துரைத்திருந்த நிலையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், காவல் […]
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன் வசதி கூடிய 500 பேருந்துகளின் சேவை தொடக்கம். நிர்பயா பாதுகாப்பு நகர திட்டத்தின் கீழ் மாநகர போக்குக்குவரது கழகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 500 பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதியுடன் கூடிய 500 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொளி […]