சென்னை அடையாறு ஆற்றின் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் கழிவுநீர் அதிகமாக கலந்து கடலில் கலக்கிறது. இதன் காரணமாக இந்த முகத்துவாரத்தில் ஆக்சிஜன் மிகவும் குறைந்து காணபடுகிறது. தற்போது இந்த காலமானது மடவை மீன்களின் இனபெருக்க காலமாகும். இதனால் ஆடையாறு முகத்துவாரத்திற்கு வந்த மீன்கள் செத்துமடிந்தன. இந்த இறந்த மீன்கள் லட்சகணக்கில் சென்னை கடலோரம் கரைஒதுங்கின.
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் நேற்று இரவு மாணவி தற்கொலை செய்ததை அடுத்து அந்த கல்லூரியில் வன்முறை வெடித்தது.இதனால் அங்கு உள்ள இடங்கள் அனைத்தும் தீவைத்து எரிக்கப்பட்டது.இதனால் அந்த இடமே போர்களம் போன்று காட்சியளித்தது.இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.அந்த கல்லூரிக்கு ஜனவரி மாதம் வரை விடுமுறையும் அளிக்க பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியினர் அம்பத்தூர் மண்டலத்தில் வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி அம்பத்தூர் மண்டல அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுந்தர்ராஜ் தொடங்கிவைத்தார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சுகாதார மையங்களிலும் மருத்துவர்களை நியமித்து மாத்திரை, மருந்துகளை கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பை மேட்டை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும், குடிநீர் தட்டுப்பாடு, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து […]
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியில் திடீர் நகர் மக்களின் வாழ்விடத்தை இடித்து நிர்கதியாக ஆக்கியிருக்கிறது நமது தமிழக அரசு. தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் இந்த சேரிகளே இனி இருக்காது என கூறி கொண்டு அம்மக்களின் இருப்பிடத்திற்கு எந்த ஒரு மாற்றையும் அறிவிக்காமல் இடித்து நொறுக்கி கொண்டே இருக்க வேண்டுமா..? அப்படி என்றால் அம்மக்களின் வாழ்விடங்களை இடிப்பதால் எங்கு செல்வது எனத்தெரியாமல் தெருவில் கண்ணீரும்,கவலையோடும் வீதியில் வந்து இருக்கிறார்கள் அம்மக்கள்..?
சென்னை:கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்திய கடலோர காவல்படையானது மீன் பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்களை தாக்கியது.ஆகவே கடலோர காவல்படையின் இத்தகைய செயலை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை காசிமேட்டில் உள்ள கடலோர காவல்படை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள குப்பை தொட்டிக்கும் பூட்டு பாதுகாக்கும் தென்னிந்திய ரயில்வே நிர்வாகம். இது தான் நமது தூய்மை இந்தியாவின் புதிய பாதுகாக்கும் அமைப்பு (security system). குப்பை தொட்டிய களவாடி கொண்டு போகக் கூடாது என்பதற்காகவே பூட்டு போட்ட பார்த்தா அங்க தான் நம்ம நாட்டோட பெருமை நிக்குது….
டாக்டர் கிருஷ்ணசாமி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இராஜலட்சுமியுடன் சந்தித்தார். இன்று (15.11.17) பிற்பகல் புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள், பட்டியலினத் துறை அமைச்சர் இராஜலட்சுமி அவர்களை சாந்தித்துத் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணைக்கான கோரிக்கை மனுவை வழங்கினார்..
சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை; அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று, அ.தி.மு.க.,வின் 19 எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர். அதன் பின், புதுச்சேரியிலும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் அவர்கள் தங்க வைக்கப்பட்டு, முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ., குறிப்பிட்ட 19 பேர் மீதும், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]