தெலுங்கு நடிகர் ரவி தேஜா மாநாடு தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். ஹைதிராபாத்தில் தெலுங்கு திரை பிரபலங்களுக்கு மாநாடு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி. இந்த செய்தியை நாமும் பல்வேறு விதங்களாக சொல்லிவிட்டோம். சிம்புவின் மாஸ் கம்பேக் திரைப்படம். வெங்கட் பிரபுவின் இன்னொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். யுவனின் தெறிக்கவிடும் பின்னணி இசை, எஸ்.ஜே.சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு என இன்னமும் மாநாடு ஏற்படுத்திய தாக்கம் ரசிகர்களிடம் குறையவில்லை என்பதே உண்மை. இந்த திரைப்படம் […]
சிலம்பரசனின் 50வது திரைப்படத்தை அவரே இயக்க உள்ளாராம். அதற்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து சிலம்பரசன் தனது அடுத்த இன்னிங்க்ஸை கோலாகலமாக தொடங்கியுள்ளார். அடுத்தடுத்து அவர் தனது படங்களின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார். தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். மாநாடு வெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு இன்று மீண்டும் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். […]
விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது புரிகிறது என நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. […]
சென்னை:நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு. நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி,நடிகர் மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,”மருத்துவ பரிசோதனைக்காக நான் மைசூர் செல்வதற்காக நவம்பர் மாதம் இரவு பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்,அப்போது,திரைத்துறையில் அவரின் சாதனைகளை […]
மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே […]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை போயஸ் கார்டனில் 2 பிளாட்களை வாங்கியுள்ளார். அதன் மொத்த விலை 18 கோடி என கூறப்படுகிறது. சென்னையில் உள்ள போயஸ் கார்டன் ஏரியா பகுதி மிகவும் பிரபலமானது. அங்குதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தனுஷ் என பல சினிமா பிரபலங்கள் அந்த ஏரியாவில் வசித்து வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தராவும் இணைந்துள்ளார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் 2 […]
தன்னை அஜித், அஜித்குமார் என்றோ அல்லது AK என குறிப்பிட்டோ அழைத்தால் போதும். தல எனும் பட்டம் கொண்டோ அல்லது வேறு பட்டங்கள் கொண்டோ அழைக்க வேண்டாம் – அஜித்குமார் வேண்டுகோள். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்தில் அவரது கதாபாத்திரத்தை ஒரு துணை அஜித்தை தல என அழைத்திருப்பார். அந்த தல எனும் பட்டம் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. அன்று முதல், […]
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இணையத்தில் பரவியது. ஆனால், அது தற்போதைக்கு உண்மையில்லை என விளக்கம் கிடைத்துள்ளது. தளபதி தற்போது அவரது 65வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். இதனை […]
கடைசி விவசாயி படத்தில் இளையராஜாவுக்கு பதில் சந்தோஷ் நாரயணன் நியமித்தது குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளதாம். விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்திற்கு இளையராஜா தான் முதலில் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் தான் சர்வதேச பட […]
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திற்க்கு தான் ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளேன் என சமந்தா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படம் தமிழை போல தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரானது. அந்த படத்தில் நாக சைதன்யா, சமந்தா நடித்துப்பார்கள். மேலும், சமந்தா, தமிழில் ஒரு சிறு வேடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா […]
மாநாடு திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சிம்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். சிலம்பரசன் நடிப்பில் கடந்த வார வியாழக்கிழமை வெளியான திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படம் வெளியான அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சிம்புவுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு மாஸ் காம்பேக் ஹிட் படமாக இந்த படம் அமைந்துள்ளது. வெங்கட் பிரபு இந்த படத்தை திறம்பட இயக்கி இருந்தார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது சிலம்பரசன் மேடையிலேயே கண்ணீர் […]
ராஜா படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதனால் தான் மீண்டும். அஜித் – வடிவேலு கூட்டணி நடைபெறாமல் இருக்கிறது என கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் சில காம்பினேஷன்கள் இனி நடக்கவே நடக்காது என்பது போல சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுவிடும். அந்த சில சம்பவங்களில் சிலவை வெளியில் தெரியும். சிலவை வெளியில் தெரிவதில்லை. அப்படி வடிவேலு – விஜயகாந்த், தனுஷ் – வடிவேலு, தற்போது அண்மையில் வடிவேலு – […]
துருவ் விக்ரமுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு காதல் கதை கூறியுள்ளார். விரைவில் இருவரும் இணையும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதன் முதலாக நடித்த வர்மா திரைப்படம் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் வர்மா திரைப்படம் வேறு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என எடுக்கப்பட்டது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டது. இவர் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக […]
மாநாடு படத்தை ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று தருவதாக கூறி, பின்னர் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பின்வாங்கிவிட்டதாக வெங்கட் பிரபு கூறிவிட்டாராம். மாநாடு ரிலீஸ் சமயம் இதுவும் ஒரு பிரச்சனையாக மாறியிருந்தது. பல்வேறு பிரச்சனைகள், தடைகள் தாண்டி சிம்புவின் கம்பேக் கமர்சியல் ஹிட் திரைப்படமாக மாநாடு வெளியாகியுள்ளது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படம் 25ஆம் தேதி ரிலீஸ் என கூறி, அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வந்த வேளையில் திடீரென தயாரிப்பாளர் […]
தல அஜித்திற்கு மங்காத்தா எனும் மாஸ் கம்பேக் ஹிட் கொடுத்த அதே இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது சிம்புக்கு மாநாடு எனும் மாஸ் ஹிட் படத்தை இயக்கியுள்ளார். இது உண்மையில், இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் கம்பேக் தான். ஒவ்வொரு நடிகருக்கும், ஏன் உச்ச நட்சத்திரத்திற்கும் கூட அவர்களது படங்கள் சரியாக போகாது, அல்லது ஒரு பெரிய ஹிட்டுக்காக காத்துகொண்டு இருப்பார்கள் அந்த படங்கள் எப்போதாவது அமையும். அது பெரும்பாலும், தங்களது வழக்கமான பார்முலாவில் இருந்து விலகி முழுக்க […]
மலையாள திரையுலகில் பிச்சு திருமலா என அறியப்படும் பி.சிவசங்கரன் என்கிற பிரபல பாடலாசிரியர் இன்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவருக்கு வயது 80. 1972இல் மலையாள திரையுலகில் அறிமுகமானார். 1970’s முதல் 1990’s வரையில் மலையாள சினிமா உலகில் பாடலாசிரியாக பணியாற்றியுள்ளார். மலையாள பிரபல இசையமைப்பாளர் முதல் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வரையில் பலரின் இசைக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார். இவர் கடந்த புதன் கிழமை அன்று மாரடைப்பால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் […]
எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! – மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஹேப்பி டிவீட். நேற்று இரவு திடீரென மாநாடு திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆதலால், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் டிவீட் போட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டுவிட்டனர். நேற்று இரவு, நள்ளிரவு வரை மாநாடு நிதி பிரச்சனை […]
சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் சிங்கப்பாதை படத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், வடிவேலு அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்துவிட்டது. அதனால், சிவகார்த்திகேயன் உற்சாகத்தில் இருக்கிறார். அவரது சம்பளமும் உயர்ந்தது. அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளும் விறுவிறுவென நடைபெறுகிறது. டான் பட ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாம். ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் இருக்கிறதாம். அதற்கடுத்து, வெகுநாட்களாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்தகட்ட […]
ஜெய் பீம் திரைப்பட சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்பதால், சில நாட்கள் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இந்தியா திரும்ப சூர்யா முடிவு எடுத்ததாக தெரிகிறது. சூர்யா நடிப்பில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படம் எந்தளவுக்கு ஆதரவை சம்பாரித்ததோ அந்த அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது, சந்தித்தும் வருகிறது. பாமக மற்றும் வன்னியர் சங்கத்திடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு இரு தரப்பில் இருந்தும் […]