சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால […]
தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- கடவுள் […]
நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான ஓ மை கோஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ‘Pre Release Event’ சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்ஷா குப்தா ஆடம்பர உடையில் வந்திருந்தார். அப்போது, அவருடைய உடையை அவரது உதவியாளர் தெரியாமல் காலால் மிதித்துள்ளார். இதனால் மிகவும் கடுப்பான தர்ஷா குப்தா தனது உதவியாளரை முறைத்து பார்த்த வீடியோ, சமூக வலைதளங்களில் […]
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது துணிவு திரைபடகில் நடிக்கும் […]
நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கனெக்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் நல்ல வரவேற்பை பெற்றுவருவதால் நடிகை நயன்தாரா அனைவருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ” இந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது. கனெக்ட் திரைப்படத்தை பார்த்து ஆதரவு கொடுத்த […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் வாரம் வாரம் Oo ‘Solriya Oo Oohm Solriya’ எனும் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று நடந்து வருகிறது. இந்த நகைச்சுவை நிகழ்ச்சியை மாக்காபாவும், பிரியங்காவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு வாரமும் 3 பிரபலங்கள் வருவார்கள், அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, சாக்ஷி அகர்வால், அனிதா சம்பத் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அதற்கான ப்ரோமோ ஒன்றையும் விஜய் தொலைக்காட்சி […]
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- நயன்தாரா முதல் ஹன்சிகா வரை…இந்த ஆண்டு […]
நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ராங்கி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரவுக்கும் தனக்கும் இருக்கும் போட்டி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய த்ரிஷா ” சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு போட்டி இல்லாமல் இருக்காது. அதைப்போல எனக்கும் நயன்தாராவுக்கு ஆரோக்கியமான […]
நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட்டிற்கு ப்ரோபோஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் ரன்பீர் கபூர் ஆலியா பட் இருவரும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் குழந்தையும் பிறந்தது. இவர்கள் அவ்போது தங்களுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருவரும் சுற்றுலா சென்று எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது […]