இளையராஜா : சாமானியன் படத்தில் இளையராஜா பாடிய பாடல் கேட்க முடியாத வகையில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா ஆரம்ப காலத்தை போல இப்போது பல படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும் கூட ஒரு சில படங்களுக்கு இசையமைத்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ராமராஜன் ஹீரோவாக நடித்த சாமானியன், மற்றும் விடுதலை ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதில், சாமானியன் படம் கடந்த மே 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் ஒரு […]
பகத் பாசில் : நடிகர் பகத் பாசில், தனக்கு ADHD குறைபாடு உள்ளதாக தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மலையாள சினிமாவை தாண்டி தமிழ் திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கி வரும் பகத் பாசிலின் சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆவேசம்’, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ,150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சமீபத்திய கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனக்கு ADHD என்ற கவனக் […]
தேவன் குமார் : கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய், சிம்பு, தனுஷ் ஆகியோருக்கு சண்டைக் காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்த தேவன் குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மே 27ம் தேதி) காலமானார். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நன்கு பரிச்சயமான நண்பரான அவர், பல படங்களுக்கு அவருக்காக சண்டைக் காட்சிகளில் குரல் கொடுத்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று தேவன் குமார் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை ஏவிஎம் மயானத்தில் […]
ஐஸ்வர்யா மேனன் : ஹைவே படத்தில் அலியா பட் நடித்த கதாபாத்திரத்தை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் சிரித்தாள் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் கடைசியாக வேழம் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அப்டியே தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் கடைசியாக ஸ்பை […]
சூரி : படப்பிடிப்புக்காக நடிகர் சூரி எங்கு சென்றாலும் தனக்கு சாப்பிட கஞ்சு வேண்டும் என்று கண்டிஷன் போடுவதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். காமெடியான கலக்கி கொண்டு இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கடைசியாக விடுதலை படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்ததாக கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு […]
ராஷ்மிகா மந்தனா : சமீபத்தில் நடைபெற்ற ‘கம் கம் கணேஷா’ ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் ராஷ்மிகா சில விஷயங்களை மனம் திறந்து கூறி இருக்கிறார். தற்போது திரைத்துறையில் பிஸியாக வளம் வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது, விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டாநடித்துள்ள படம் தான் ‘கம் கம் கணேஷா’. இந்த திரைப்படம் வருகிற மே-31 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக […]
சிவகார்த்திகேயன் : விஜய் சினிமாவை விட்டு விலகிய பின் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிடுவார் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருப்பதில் நடிகர் விஜய்யும் ஒருத்தர் என்று கூறலாம். இவருடைய படங்கள் எல்லாம் எந்த அளவுக்கு வசூல் செய்கிறது என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இருப்பினும் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால் அவர் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற […]
சென்னை : ஐக்கிய அரபு அமீரகத்தில் 11 நாட்கள் ஓய்வுக்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் ஷூட்டிங் இம்மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து சில நாள்கள் ஓய்வெடுக்க ரஜினி அபுதாபி சென்றிருந்தார். அங்கு அவர், கோயிலுக்குச் சென்று வழிபட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. மேலும், அங்கு அவருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது ஐக்கிய அரபு […]
சூரி : விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் 3 மடங்கு பயங்கரமாக இருக்கும் என சூரி தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, அப்புக்குட்டி, கௌதம் வாசுதேவ் மேனன், ஆர். வேல்ராஜ், சேத்தன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “விடுதலை”. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய […]
சூர்ய பிரகாஷ் : மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலமானார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் […]
கீர்த்தி சுரேஷ் : சவாலான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய ஆசை இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் ஆரம்ப காலத்தை போல இல்லை என்றாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் ஒரு பக்கம் தொடர்ச்சியாக குவிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, ஆகிய படங்களையும், ஹிந்தியில் பேபி ஜான் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வித்தியாசமான கதையம்சத்தை கொண்ட […]
ஜான்வி கபூர் : காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது “மிஸ்டர் & மிஸஸ் மஹி” என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
அமரன்: சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அமரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதால், படக்குழுவுக்கு விருந்து அளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் . இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது, தற்போது ‘அமரன்’ படப்பிடிப்பில் இருந்து ஒரு புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. மேலும் படத்தின் […]
சென்னை : ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் ரஜினிகாந்துக்கு Golden Visa வழங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கியுள்ளது. மலையாள தொழிலதிபர் MA யூசுப் அலி முன்னிலையில் DTC தலைவர் முகமது கலீஃபா அல் முபாரக் கோல்டன் விசாவை ரஜினிகாந்திற்கு வழங்கினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து வீசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப்படுவதாகவும் விசாவை பெற்ற பிறகு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விசா நடைமுறைகளை கையாண்ட […]
சென்னை : மக்கள் தன்னை மறக்காமல் இருக்க இளையராஜா தன்னுடைய படங்களுக்கு கொடுத்த இசை தான் காரணம் என ராமராஜன் கூறியுள்ளார். ஒரு காலத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வளரும் வந்தவர் ராமராஜன். இவருடைய கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு ராமராஜனின் மார்க்கெட் அந்த சமயம் ரொம்பவே உச்சத்தில் இருந்தது என்றே சொல்லவேண்டும். பிறகு பட வாய்ப்புகள் குறைய […]
சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் ‘SOODAANA (The Couple Song)’ பாடல் மே 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் அறிமுக வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் மே 29ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடலின் சிறிய கிளிப்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளனர். இந்த பாடல் ராஷ்மிகா […]
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, அவர் “வெப்ப வாதத்தால்” பாதிக்கப்பட்டு அகமதாபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஜூஹி சாவ்லா, “ஷாருக்கிற்கு உடல்நிலை சரியில்லை, ஆனால் இப்பொது அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் குணமாகி, இனித் வார இறுதியில் […]
சென்னை : விஜய்க்கு அரசியல் என்றால் என்ன என்பதை நான் தான் கற்றுக்கொடுத்தேன் என பிரபலம் ஒருவர் பேசியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இப்போது அவர் அரசியல் கட்சியை தொடங்கி இருந்தாலும் கூட, ஆரம்ப காலத்தில் அரசியல் பற்றி தெரியாமல் விஜய் கட்சி என்றால் என்ன என்று ஒரு பிரபலத்திடம் கேட்டு தெரிந்துகொண்டாராம். அந்த பிரபலம் […]
சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படத்தில், நடிகர் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை படைத்துள்ளது […]
சென்னை : கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த பிறகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், ஆரம்ப காலத்தை போல பெரிய அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் காஜல் […]