சென்னை : வாழை படத்தினை கண்டிப்பாக திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள் என சிவகார்த்திகேயன் பாராட்டி பேசிய நிலையில், மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். வாழை படத்தை பற்றி பிரபலங்கள் பலரும் பாராட்டி பேசி வரும் நிலையில், படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் படம் பற்றி பேசி மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பேசும்போது ” நம்மளுடைய நெருக்கமானவர்களுடைய கதையை கேட்கும்போது ஒரு ஆர்வம் எமோஷனலாக இருக்கும். அப்படி தான் வாழை படத்தில் மாரி செல்வராஜ் அவருடைய கதையை […]
சென்னை : வாழை படத்தைப் பார்த்து இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் ஆக23 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் விமர்சனங்களைத் தெரிவிப்பதற்கு முன்பே கண்கலங்கி அழுதார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, நடிகர் சூரி, தங்கதுரை உள்ளிட்ட பிரபலங்கள் கண்கலங்கி மாரி செல்வராஜைக் கட்டியணைத்துப் பாராட்டினார்கள். இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு இரண்டு முறை அழுதேன் எனப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திவ்யா […]
சென்னை : மேகா ஆகாஷ் தனது காதலர் சாய் விஷ்ணுவுடன் நேற்று (ஆகஸ்ட் 22ம் தேதி) நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நடிகை மேகா ஆகாஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், அவர் தனது திருமணம் செய்தி குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், தற்போது அவரது திருமணம் குறித்த கிசுகிசுக்கள் உண்மையாகிவிட்டது. ஆம், நடிகை மேகா ஆகாஷூக்கு காதலர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. […]
சென்னை : ‘சார்பட்டா பரம்பரை’ தேசிய விருதுகளில் நிராகரிக்கப்பட்ட காரணத்தை இயக்குனர் பா.ரஞ்சித் வேதனையுடன் தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி கொண்டாடப்பட வேண்டிய படங்களில் ஒன்று ‘சார்பட்டா பரம்பரை’. ஆனால், இந்த படம் கொரோனா காலகட்டத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான இந்த படத்தை பார்த்து மக்கள் கொண்டாடினார்கள். இந்த படம் அரசியல் காரணங்களுக்காக தேசிய விருதுக்காக அனுப்பப்பட்ட போது நிராகரிக்கப்பட்டது என பா.ரஞ்சித் கூறியிருக்கிறார். சென்னையில், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி […]
சென்னை : வாழை படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூரி இருவரும் மாரி செவ்வரஜை கட்டியணைத்து பாராட்டி உள்ளார்கள். மாரி செல்வராஜ் இயக்கி உள்ள வாழை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆக 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், பிரபலங்கள் பலருக்கும் படத்தை சிறப்பு காட்சியில் காண்பிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் படத்தை பார்த்து பிரபலங்கள் பாராட்டி பேசி வருகிறார்கள். குறிப்பாக, நடிகர் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படத்தினை பார்த்து விட்டு பாராட்டி இருந்தார்கள். […]
சென்னை : மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து ‘நவீன் நங்கையர் பவுண்டேஷன்’ சார்பில் போராட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ” மலையாள திரைத்துறையைப் போலத் தமிழ் […]
சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை […]
மும்பை : மெலிந்த தோற்றத்தில் நடிகை சமந்தா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். நடிகை சமந்தா இன்று காலை சந்தோஷமான செய்தியை அறிவிக்கப்போகிறேன் என அறிவித்து இருந்தார். அந்த சந்தோஷமான செய்தி என்னவென்றால், சமந்தா World Pickleball League 2024 தொடரில் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சென்னை அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றது பற்றி சமந்தா பேசுகையில் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே PickleBall […]
சென்னை : எங்க படத்தை மோசமா விமர்சிக்கிறார்கள் எனவும், கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சிலருக்கு ஏன் பிடிக்கவில்லை என்ற காரணம் குறித்தும் பா.ரஞ்சித் பேசி இருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் வாழை படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், மிஷ்கின், பா.ரஞ்சித், ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படம் பற்றியும், இயக்குனர் […]
சென்னை : வாழை படம் ஒரு படமாகவே இருக்காது எனப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் பா.ரஞ்சித், கவின், மிஷ்கின், ராம், நெல்சன் எனப் பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அப்போது, வழக்கம் போல் சர்ச்சைகளைக் கிளப்பும் வகையில் பேசும் மிஷ்கின் இந்த படத்தின் விழாவிலும் சர்ச்சையைக் […]
சென்னை : வாழை திரைப்படத்தின் பார்த்து வியந்த சிம்பு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்றில் பயணித்தபோது அந்த லாரி விபத்தில் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த ‘வாழை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான […]
சென்னை : விஜய் நடித்துள்ள கோட் படத்தில் தோனி கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்க வாய்ப்புள்ளதாக பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு ஆக 17-ஆம் தேதி வெளியிட்டது. டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம். டிரைலரில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளில் இந்திய […]
சென்னை : கொட்டுக்காளி படத்தினை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் சூரிக்குக் கால் செய்து பாராட்டிப் பேசியுள்ளார். சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சூரி மும்மரமாக இறங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ‘கொட்டுக்காளி’ படத்தினை பார்த்து விட்டு சிவகார்த்திகேயன் அவரிடம் கூறிய விஷயத்தை […]
ஹைதராபாத் : சூர்யா நடித்து வரும் கங்குவா படம் பல சாதனைகளை முறியடித்து புது சாதனைகளை படைக்கும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் நிச்சியமாக தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாகவே பெரிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கலான் படத்தின் […]
சென்னை : கங்குவா படம் வெளியான பிறகு ஒரு மாதம் படத்தை பற்றி தான் உலகம் முழுவதும் பேசுவார்கள் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். சூர்யா நடித்து வரும் கங்குவா படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆக 12-ஆம் தேதி படத்திற்கான டிரைலர் வெளியானது. டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் என அனைத்தும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை […]
டெல்லி : திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும்தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடிகர் […]
சென்னை : கடந்த 2022-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்க்காக தேசிய விருது கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் – பாகம் 1 : இயக்குனர் மணி ரத்னம் டைரெக்க்ஷனில், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், சரத்குமார் போன்றவர்கள் நடித்து பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் ‘பொன்னியின் செல்வன்-1’. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. பெரும் எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியான […]
சென்னை : சுதந்திர தினத்தை ஒட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ செய்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கமல்ஹாசன், விஜய் என பலரும் சமூக வலைதள பக்கங்களில் சுதந்திர தின விழா பற்றி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ […]
சென்னை : தங்கலான் படத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் காண்பிக்கப்படும் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று படத்திற்கான பிரஸ் மீட் நடந்தது. அதில், இயக்குனர் பா ரஞ்சித், மாளவிகா மோகனன், விக்ரம், […]
சென்னை : G.o.a.t எப்படி இருக்கும்? படத்தின் மையக்கரு, விஜய்யின் டபுள் ரோல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை மனம் திறந்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்த வெங்கட் பிரபு, ‘The G.o.a.t ‘ கற்பனைக் கதைதான், ஆனால் நிஜத்திற்கு மிக அருகாமையில் வற முயற்சி செய்திருக்கிறோம். மேலும் கதையின் கரு குறித்து பேச தொடங்கிய வெங்கட் பிரபு, “SATS அதாவது (special Anti-Terrorist Squad)-னு ஆரம்பதித்தார். இந்த அமைப்பு RAW […]