டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று தற்காலிகமாக முடக்கியது . சில நாட்களுக்கு முன்பு, ரன்யா ராவ் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.213 கிலோ மறைத்து வைக்கப்பட்ட 24 காரட் தங்கத்துடன் பிடிபட்டார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2.67 […]
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து, அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தக் காட்சியில், சூர்யாவின் நடிப்பையும் படத்தின் ஆக்ஷன் காட்சிகளையும் விஜய் மனதார புகழ்ந்தார். “முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா!” என்று சூர்யாவை வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனல் அரசு இயக்கத்தில் வெளியாகிய இந்தப் படம், சூர்யாவின் ஆக்ஷன் அவதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தப் […]
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மற்றும் போதைப் பொருள் சப்ளையர் கெவின் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்டது. கடந்த ஜூன் 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள், எழும்பூர் நீதிமன்ற […]
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த புகாருக்கு, விஜய் சேதுபதி மன்னிப்பு கோரியுள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,” என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இந்த சம்பவம், சூர்யாவின் முதல் படத்தின் விளம்பர நடவடிக்கைகளைச் சுற்றி எழுந்த சர்ச்சையால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் விளம்பரங்களைப் பொறுத்தவரை, சமூக […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக வந்த செய்தி தான். இருவரும் இணைந்து செய்ய கூடிய அந்த படம் வடசென்னை 2 எனவும் செய்திகள் பரவ தொடங்கிவிட்டது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக சமீபத்தில் தனியார் யூடியூப் […]
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த படத்தின் டிசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அது மட்டுமன்றி, படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அப்பா வேற நான் வேற என சூர்யா விஜய் சேதுபதி பேசியது ஒரு பக்கம் விமர்சனமும் ஆனது. அந்த விமர்சனங்களால் மனமுடைந்த சூர்யா விஜய் சேதுபதி நான் பேசியது தவறு தான் என […]
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக அவரிடம் விசாரணை செய்ய காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பிறகு சென்னையில் வைத்து அவரிடம் காவல்துறை இது தொடர்பாக விசாரணையையும் நடத்தியது. மேலும், விசாரணையின் போது, கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்து அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார். இருந்தாலும், ருஷ்ணா வீட்டில் 2 மணி […]
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், அவர் இங்கே இல்லை என்றும், கேரளாவில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணாவின் குடும்பத்தினர் மூலம் அவருக்கு இந்த தகவலை போலீசார் தெரிவித்த நிலையில், முதலில் விசாரணைக்கு வரவிருந்தார். அதன்பின், கிருஷ்ணா, விசாரணைக்கு […]
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கிருஷ்ணாவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறையினர் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி […]
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் கடந்த ஜூன் 5, 2025 அன்று வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றியது. 1987இல் வெளியான ‘நாயகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, இந்தக் கூட்டணியில் மற்றொரு காவியத்தை நமக்கு கொடுக்கும் கண்டிப்பாக படம் மறக்க முடியாத அளவுக்கு ஒரு தரமான படமாக இருக்கும் […]
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது […]
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு […]
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (Narcotics Control Bureau – NCB) காவல்துறையினர், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தில், “நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைன் போதைப்பொருளை ரூ.12,000-க்கு வாங்கி பயன்படுத்தினார்,” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் […]
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’ படப்பிடிப்பு தளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து வதந்திகள் பரவி வருவதால், படக்குழு மிகவும் வேதனையடைந்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில், கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலில், ஒரு பணியாளரின் மரணம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிகழ்ந்ததாகவும், பின்னர் மிமிக்ரி கலைஞர் […]
சென்னை : கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் நடந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171, போயிங் 787-8 ட்ரீம்லைனர்) புறப்பட்ட சில நிமிடங்களில் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 242 பேர் […]
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது, கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் நடைபெற்று வரும் நிலையில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படகில் நடிகர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி உட்பட 30-க்கும் மேற்பட்ட படக்குழு உறுப்பினர்கள் இருந்தனர். விபத்து மஸ்தி கட்டே பகுதியில் உள்ள மெலினா கொப்பா என்ற இடத்தில், ஆழமற்ற நீர்ப்பகுதியில் […]
சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெளியீடு விஜயகாந்தின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்துள்ளது. ஏனென்றால், விஜயகாந்த் இறந்தபிறகு அவருடைய மகன் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம். இப்படத்தில் விஜயகாந்தின் AI மூலமான தோற்றம் இடம்பெற்றுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் வரும் காட்சியை பார்த்து கண்கலங்காதவர்கள் யாருமே இருக்க […]
சென்னை : இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பல படங்கள் இன்று வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் அவருடைய இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் இன்று வரை பலருடைய பேவரைட் படமாக இருந்து வருகிறது. படத்தில் அவருடைய நடிப்பை பற்றியும் சொல்லியே தெரியவேண்டாம். ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் கதிர் இல்லயாம் அவருக்கு பதிலாக அதர்வா தான் நடிக்கவிருந்தாராம். […]
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். அவர் பேசிய அந்த நாளில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் […]
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரான தினேஷ் மாஸ்டர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது. ‘லியோ’ திரைப்படத்தில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி ஃபைட் மாஸ்டராக மாறியதாகவும் சங்க உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள், சங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை அடுத்து, தினேஷ் மாஸ்டருக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து […]