இந்திய சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவையுடன், புதிய மாடல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னணி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான எம்எக்ஸ்மோட்டோ(mXmoto) தற்போது தனது புதிய எலக்ட்ரிக் பைக் எம்எக்ஸ்மோட்டோ எம்16ஐ(mXmoto M16) சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. M16 இ-பைக்கின் பேட்டரிக்கு MXmoto 8 வருட உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. இது தவிர, மோட்டாருக்கு 80,000 கிமீ வாரண்டியும், கன்ட்ரோலருக்கு 3 வருட வாரண்டியும் வழங்கியுள்ளது. கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்ட இந்த இ-பைக்கின் […]
நாம் அன்றாடம் உபயோகப்படுத்துவதில் நமது பைக்கும் ஒன்றாகும். அந்த இரு சக்கர வாகனத்தை நாம் மாதம் ஒரு முறையாவது பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்காமல் விட்டால் நமது இரு சக்கர வாகனம் பழுதாகி விடும். அதனால், நமது பைக்கை எப்படி பராமரிக்க வேண்டும் என்று ஒரு 10 டிப்சை பற்றி பாப்போம். 1) என்ஜின் ஆயில் : நமது பைக் இயங்குவதற்கு முக்கிய காரணத்தில் ஒன்றாக இருப்பது பைக்கின் இன்ஜின் தான். அந்த என்ஜினை சரியாக பரிமாறிக்க […]
இந்தியா முழுவதும் சில்லறை வாகன விற்பனை இந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து வகை வாகனங்களும் வலுவான வளர்ச்சியை எட்டி உள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள், ட்ராக்டர்கள் மற்றும் வர்த்தக வாகனகள் போன்ற ஒட்டு மொத்தமாக சந்தை 15% விரிவடைந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் 15 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 37 சதவீதமும், பயணிகள் வாகனங்கள் 13 சதவீதமும் , டிராக்டர்கள் 21 சதவீதமும் மற்றும் வர்த்தக வாகனங்கள் […]
இந்திய சந்தையில் ஏராளமான கார்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வருகின்றன. எரிவாயுவால் இயங்கும் கார்களை போலவே மின்சார கார்களும் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இவ்வகை கார்களில் பல கார்கள் விலைமதிப்புமிக்க கார்களாகும். அதில் மிக அதிக விலையில் விற்பனையாகும் மின்சார காராக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் உள்ளது. விலையுயர்ந்த கார்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள இந்த காரில் அசத்தலான சிறப்பம்சங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 7.5 கோடி என நிர்ணயம் […]
நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பைக்குகளான பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அதன்படி, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. […]
இந்தியாவின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது டாடா டியாகோ சிஎன்ஜி எஎம்டி (Tiago CNG AMT) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி எஎம்டி (Tigor CNG AMT) கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஆகியவை இந்தியாவில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கொண்ட முதல் சிஎன்ஜி (CNG) கார்கள் ஆகும். காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!! டாடா டியாகோ மற்றும் டாடா […]
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃப்ரான்ஸ் மற்றும் ஜிம்னி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஃப்ரான்ஸ் காரின் விற்பனை ஏப்ரல் மாதமும் ஜிம்னி காரின் விற்பனை ஜூன் மாதமும் தொடங்கிய நிலையில் இந்திய SUV கார் விற்பனையில் மாருதி முதலிடத்தை பிடித்தது. ஆனால் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மாருதி SUV கார்களின் விற்பனை சரிய ஆரம்பித்த நிலையில் முதலிடத்தை மஹிந்திரா பிடித்தது. மேலும், மஹிந்தரா, டாடா, ஹூண்டாய் நிறுவனத்திற்கு அடுத்து நான்காவது இடத்துக்கு மாருதி […]
இருசக்கர வாகன உலகில் ஒவ்வொரு நாளும் புது புது அம்சங்களோடு புத்தம் புது வாகனங்கள் சந்தையில் களமிறங்கினாலும், அதில் குறிப்பிட்ட வாகனங்களில் பெயர்கள் மட்டுமே நினைவில் நிற்கும். அதும் அந்த வாகனத்தின் தரம், வாடிக்கையாளர்களின் விமர்சனங்களை பொறுத்தே அதன் ஆயுட்காலம் இருக்கும். முதலாளியின் 100வது பிறந்தநாளுக்கு Hero கொடுத்த ‘ஷாக்’ சர்ப்ரைஸ்.! Hero CE001 ‘100’ மட்டுமே..! நவீன வசதிகளை கொண்டு எத்தனை புது மாடல் பைக் வந்தாலும், ராயல் என்பீல்டு எனும் நிறுவனம் வெளியிடும் பைக்கிற்கு […]
ஹீரோ குழுமத்தின் நிறுவனர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜான் , கடந்த 1923, ஜூன் 1ஆம் தேதி பிறந்தார் . தனது 95வது வயதில் நவம்பர் 1, 2015இல் உயிரிழந்தார். இவரது நூற்றாண்டு பிறந்தநாளை Hero நிறுவனம் இந்த வருடம் கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவில் ஓர் பிரத்யேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு இயர்பட்ஸ் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்தது Fire Pods Zeus! 100 பைக் மட்டுமே… பிரிஜ்மோகன் லால் முன்ஜான் […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன சந்தையிலும் பலமாக கால்பதித்து உள்ளது. டாடா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனமான பன்ச் EV-ஐ அறிமுகபடுத்திய பின்னர் இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸின் நிலை தற்போது வலுவாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் இந்திய பங்குசந்தையில் 85 சதவீத சந்தை பங்கை டாடா நிறுவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை : டாடா பன்ச் (Tata Punch.ev) எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் மற்றும் வசதிகள் கொண்டு 12 லட்சம் முதல் 14 […]
1972ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் கடந்து 2006வரை விற்பனையில் திகழ்ந்தது பஜாஜ் சேத்தக் (Chetak) ஸ்கூட்டரை அவ்வளவு சீக்கிரம் மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள். அதே பெயரை மீண்டும் வைத்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பஜாஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அறிமுகபடுத்தப்பட்ட பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புது அப்டேட்கள் கொண்டு மேம்படுத்தி அந்த மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஜனவரி 9ஆம் தேதி பஜாஜ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் […]
இருசக்கர வாகன விற்பனையின் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது TVS நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யபப்படும் உயர்தர வாகனம் என்றால் அது TVS அப்பாச்சி தான். அதனால் TVS அப்பாச்சி பைக்கை அவ்வப்போது புத்துருவாக்கம் செய்து அறிமுகம் செய்து வருகிறது TVS நிறுவனம். வெகு நாட்களாக அப்பாச்சி பிரியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த டூயல் சானல் ABS பிரேக்கிங் சிஸ்டம் தற்போது புதிய அப்பாச்சி 160 4V (TVS […]
எலெக்ட்ரிக் வாகனச்சந்தையில் முன்னணியில் இருக்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் (ஜிஇஎம்பிஎல்)-க்கு சொந்தமான ஆம்பியர் நிறுவனம், அண்மையில் அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டரான ஆம்பியர் பிரைமஸ் (Ampere Primus)-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் இப்போது இ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. நீங்கள் எவரேனும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், தாமதப்படுத்தாமல் இப்பொழுதே வாங்குங்கள். ஏனெனில், அதன் விலையில் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிளிப்கார்ட்டில் ஆம்பியர் பிரைமஸ் ஸ்கூட்டர் மீது 16% […]
Eletre SUV: 1940-களில் இருந்து ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வரும் லோட்டஸ் (Lotus) எனும் பிரிட்டிஷ் நிறுவனம், அதன் புதிய கார்களை நவம்பர் 9ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவியான எலெட்ரே-வை அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோலில் இயங்கும் எமிரா ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் எலக்ட்ரிக் எலெட்ரே எஸ்யூவி, ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், எலெட்ரே எஸ்யூவியை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் கார் […]
புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ்கார் தயாரிப்பாளரான லோட்டஸ் (Lotus), நவம்பர் 9ம் தேதி இந்திய சந்தையில் அதன் அதிகாரப்பூர்வ நுழைவை அறிவிக்க உள்ளது. இந்தியாவில் அதன் விற்பனை மற்றும் சேவையை கையாள புதுடெல்லியில் உள்ள பிரத்யேக மோட்டார்ஸ் நிறுவனத்துடன் உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சீன வாகன நிறுவனமான ஜீலி ஆட்டோமோட்டிவ்க்குச் சொந்தமான லோட்டஸ் நிறுவனம், எந்தெந்த வாகனங்களை இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளது என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், விற்பனைக்கு வரும் முதல் இரண்டு மாடல்கள் பெட்ரோலில் […]