ஆண்களின் உடலில் இந்த 6 அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம்..!

ஆண்களின் உடலில் இந்த 6 அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் இருப்பதாக அர்த்தம்..!

Default Image

புற்றுநோய் அபாயம் நம் உடலில் எந்த உறுப்புகளில் வேண்டுமானாலும் ஏற்படலாம். மிக கொடிய நோய்களில் ஒன்றான இது புற்றுநோய் செல்களாக உருபெறுகிறது. ஆரம்ப நிலையில் இவை நம் உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது கடினம். ஆனால், அதன் பிறகு இதன் வீரியம் பல மடங்கு அதிகரித்து விடும்.

உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை பல இடங்களில் இந்த வகை புற்றுநோய் செல்கள் வளர இயலும். அவ்வாறு உருவாகும் போது பலவித மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பதிவில் ஆண்களின் உடலில் எப்படிப்பட்ட வகையில், இந்த புற்றுநோய் அறிகுறியாக தென்படும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆணுறுப்பில் மாற்றம்
ஆண்களின் விரைகளில் ஏதேனும் வீக்கம் போன்று இருந்தால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்.இது மிக ஆபத்தான அறிகுறியாகும். இதை டெஸ்டிகுலார் கேன்சர் என்று கூறுவார்கள். இதை இரத்த பரிசோதைனையின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இரத்தம் வடிதல்
மலம் கழிக்கும் போது ஏற்பட கூடிய சில மாற்றங்கள் கூட புற்றுநோயிற்கான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறினால் பித்தப்பை, சிறுநீரகம், மற்றும் பெருங்குடல் முதலியவற்றில் புற்றுநோய் செல்கள் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும்.

நெஞ்செரிச்சல்
நெஞ்சு பகுதியில் அடிக்கடி எரிச்சல் போன்றோ அல்லது அழுத்தமாகவோ இருந்தால் வயிறு அல்லது தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாம். இவை தான் உங்களுக்கு இப்படிப்பட்ட அறிகுறியை ஏற்படுத்த கூடும்.

எப்போதுமே காய்ச்சல்..!
காய்ச்சல் என்பது சற்று மோசமான விஷயம் தான், என்றாலும் இது கூட புற்றுநோயிற்கான அறிகுறியாக மாற வாய்ப்புகள் உண்டு. தொற்றுகள் இரத்தத்தின் சிவப்பு அணுக்களை குறைக்கும் போது இரத்த வகை புற்றுநோயாக இருக்கலாம்.

மார்பக புற்றுநோய்
பெண்களை போலவே ஆண்களுக்கும் இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகள் அதிகமாகவே உள்ளதாம். மார்பக பகுதியில் ஏதேனும் புது வித அறிகுறி தென்பட்டால் அதை உடனே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துங்கள்.

கடினம்
சாப்பிட்ட எந்த உணவும் சரியாக விழுங்க முடியாமல் கடினமாக இருக்கிறதா..? மேலும், அடிக்கடி வாந்தி ஏற்பட்டு, உடல் எடை குறைகிறதா..? இந்த நிலை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இது வயிற்று அல்லது தொண்டை பகுதியில் புற்றநோய் செல்களை உருவாகி இருப்பதை குறிக்கும்.

Join our channel google news Youtube