மாயங்க் யாதவ் இல்லாமல் சமாளிக்குமா லக்னோ ? பேட்டிங் செய்ய களமிறங்கும் டெல்லி ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய இரவு போட்டியில் லக்னோ அணியும், டெல்லி அணியும்  மோதுகிறது.

நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய  போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் தற்போது லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது. லக்னோ அணியின் பலமான யுக்தியை இந்த போட்டியிலும் கேப்டன் கே.எல்.ராகுல் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த தொடரில் தற்போது வரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 3-வதாக இருக்கும் லக்னோ அணியை இன்று எதிர் கொள்கிறது. டெல்லி அணி வருகிற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்குகிறது. இதனால் இந்த போட்டியில் சற்று விறுவிறுப்பு அதிகவே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

லக்னோ அணியில் வேக பந்து வீச்சாளரான மாயங்க் யாதவ் இன்றைய போட்டியில் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக அர்ஷத் கான் களமிறங்க உள்ளார். மேலும், டெல்லி அணியில் காயம் காரணமாக வெளியேறி இருந்த நட்சத்திர பிந்து வீச்சாளர்களான குலதீப் யாதவும், முகேஷ் குமாரும் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

லக்னோ அணி வீரர்கள் :

குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), தேவ்தத் படிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்

டெல்லி அணியின் வீரர்கள் :

ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.