8 மாதத்தில் 89,000 கோடி காலி… சோமட்டோ முதலீட்டர்களுக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்….
கடந்த 8 மாதத்தில் சோமட்டோ நிறுவனத்தின் மதிப்பு 89 ஆயிரம் கோடி குறைந்து 36,848 கோடியாக உள்ளது.
உணவு டெலிவரி நிறுவனத்தில் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி இருக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமானது சோமட்டோ.
இந்த நிறுவனம், கடந்த 8 மாதத்தில் மட்டும் தனது மதிப்பில் 89,000 கோடி குறைந்துள்ளளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தேசிய பங்குசந்தையில், அதன் மதிப்பு கடந்த நவம்பர் 2021இல் 1.25 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 8 மாதம் கழித்து தற்போது அந்நிறுவன மதிப்பு 36,848 கோடியாக குறைந்துள்ளது.
சுமார் 89,000 கோடி சோமோட்டா நிறுவன மதிப்பு குறைந்துள்ளது. தேசிய பங்குசந்தையில் 13 சதவீதம் குறைந்து ஒரு பங்கின் விலை 46ஆக உள்ளது.