தஞ்சாவூர் ட்ரோன் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ZOHO ஸ்ரீதர் வேம்பு.!
ZOHO: தஞ்சாவூரை சேர்ந்த டிரோன் தயாரிக்கும் யாழி ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு முதலீடு செய்ய உள்ளார் என எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த தினேஷ் பால்ராஜ் மற்றும் அனுகிரஹா எனும் தம்பதி நெதர்லாந்தில் பணிபுரிந்து விட்டு தற்போது தமிழகத்தில் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். தஞ்சாவூரை தளமாக கொண்டு டிரோன் தயாரிப்பு நிறுவனத்தை இந்த தம்பதி தொடங்கியுள்ளனர்.
யாளி ஏரோஸ்பேஸ் (Yali Aerospace) எனும் இந்த நிறுவனமானது, ராணுவம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான சிறிய வகையிலான டிரோன் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பிரபல ஐடி நிறுவனமான சோகோ (Zoho) நிறுவன தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு முதலீடு செய்ய உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.
இந்த தகவலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தினேஷ் பால்ராஜ் மற்றும் அனுகிரஹா ஆகியோரின் தலைமையில் தஞ்சாவூரில் இயங்கும் ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனமான யாலி ஏரோஸ்பேஸில் எங்கள் முதலீட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதைத் தொடங்க நெதர்லாந்தில் இருந்து சொந்த ஊரான தஞ்சாவூருக்குத் இவர்கள் திரும்பியுள்ளனர்.
இந்த டிரோன்கள் மூலம் செங்குத்தாக புறப்பட்டு , செங்குத்தாக தரையிறங்கும் வண்ணம் டிரோன்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மருந்துகள் மற்றும் உடல் உறுப்புகளை கூட தொலைதூர மருத்துவமனைகளுக்கு வழங்கலாம் என்றும், இதன் மூலம், 150 கிமீ தூரம் வரை, 7 கிலோ எடையுடன், அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ வேகம் கொண்டு ட்ரோனை இயக்க முடியும் என ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் முதலீடு விவரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
We are happy to announce our investment in Yali Aerospace, a drone startup based in Tanjavur led by the husband and wife team of Dinesh Baluraj and Anugraha. They returned from the Netherlands to their home town of Tanjavur to start this.
They have built a fixed wing drone with… pic.twitter.com/A78RawTyTN
— Sridhar Vembu (@svembu) May 28, 2024