மீண்டும் சரிவடைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

பொதுவாகவே இன்று பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. இதானால் மக்கள் தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்றத்தை தினமும் உருகவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்த ஒரு வரமாக தங்கம் விலை சரிவை கண்டு வந்த நிழலில், நேற்று திடீரென உச்சம் கண்டது. அக்டோபர் தொடக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.80 உயந்த நிலையில், அதே 80 ரூபாய் சரிந்துள்ளது.
(06.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,280க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,285க்கும் விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசு குறைந்து ரூ.73.00க்கும், கிலோ வெள்ளி ரூ.73,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
(05.10.2023) நேற்றைய நிலவரப்படி, , சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,295க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசு உயர்ந்து ரூ.73.50க்கும், கிலோ வெள்ளி ரூ.400 உயர்ந்து ரூ.73,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.