இந்தியா உலக வாணிப அமைப்பில் முறையீடு! அமெரிக்காவிடம் மோதும் இந்தியா!
உலக வாணிப அமைப்பில் இந்தியா, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்துவதை எதிர்த்து முறையிட உள்ளது. உள்நாட்டுத் தொழில்களைக் காக்கும் நடவடிக்கையாக உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி வரியை உயர்த்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா, சீனா ஆகியவற்றின் வணிகப் போட்டியைச் சமாளிக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் வணிகப் போர் உருவாகும் அபாயமுள்ளதாக அமெரிக்கர்கள் பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் உருக்கு, அலுமினியம் இறக்குமதிக்கு வரியை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவை எதிர்த்து உலக வாணிப அமைப்பில் இந்தியா முறையிட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.