மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டு வரும் நிலையில், இன்றும் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

gold price

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. உதாரணமாக, வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கும் விற்பனையானது.

அதனைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை, விலை மேலும் உயர்ந்து, கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.8,060-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.64,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு கொஞ்சம் ஆறுதல் கொடுக்கும் விதமாக, புதன்கிழமை தங்கம் விலை திடீரென சரிந்து, பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆறுதல் கொடுத்த அதே வேகத்தில் இன்று வியாழக்கிழமை காலை அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.63,840 ஆக உள்ளது. தற்போது 1 கிராம் தங்கம் ரூ,7,980 என்ற விலைக்கு விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.52,640-க்கும் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,580-க்கும், விற்பனை செய்யப்படுகிறது.  மேலும், வெள்ளி விலை பொறுத்தவரையில் கடந்த 9 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி – ரூ.107க்கும், 1 கிலோ வெள்ளி – ரூ. 1,07,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Anil kumble - Rahul dravid - Virat kohli - Rajat Patidar
ben duckett Kevin Pietersen
Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan
rajat patidar
russia ukraine war Donald Trump
PM Modi USA Visit