தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் என்ன?
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். மீண்டும் கிடுகிடுவென எகிறும் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.54,160க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,770க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87.50க்கும், கிலோவிற்கு ரூ.87,500க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (26-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.54,040க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,755க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.88க்கும், கிலோ வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.