சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (19-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.53,520-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை (10.06.24) ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53,040ஆகவும், கிராம் ரூ.6,630 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (18-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560-க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,695-க்கு விற்பனை ஆனது. அதேபோல், வெள்ளி விலை கிராமிற்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.96க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.