சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. வார தொடக்க நாளான நேற்று சற்று சரிவை கண்ட தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (18-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,560க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமிற்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.96க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (17-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து, ரூ.53,520-க்கும், கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,690-க்கு விற்பனை ஆனது. அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் ரூ.95.60-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…