வார இறுதியில் சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold price

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ரூ.520 வரை உயர்ந்த நிலையில், வார இறுதி நாளான இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (13-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,440க்கும், கிராமிற்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,805க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கு விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (12-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,600க்கும், கிராமிற்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,825க்கும் விற்பனை ஆனது. அதே சமயம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100க்கு  விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்