குறைந்தது ஆபரணத் தங்கத்தின் விலை.! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (01-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து, சவரனுக்கு ரூ.53,680க்கு விற்பனையாகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.98க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (31-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் இன்று விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.100க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.