தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,720-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

GOLD PRICE

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கும், கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,720-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கடந்த ஐந்தாம் நாளாக இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த வெள்ளி விலை இன்று 1 ரூபாய் குறைந்து கிராமுக்கு ரூ.99க்கும், கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்