ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: கடந்த ஒரு வார காலமாக கடும் ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, இந்த வார தொடக்க நாளான திங்கட்கிழமை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்தது. ஆனால், கடந்த இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை ரூ.1,240 உயர்ந்திருக்கிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,205ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து இன்று ரூ.7,285க்கு விற்பனையாகிறது.
அதே நேரம், நேற்றைய தினம் அதிரடியாக உயர்ந்த வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.103க்கும், கிலோவுக்கு ரூ.103,000. விற்பனையாகிறது. விற்பனையாகிறது.
மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,947-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.63,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.