பட்ஜெட் குறித்து குறிவைக்கப்பட்டும் உலகவங்கி அறிக்கை முதல் வருமான வரி விலக்குவின் எதிர்பார்ப்புகள் என்னென்ன..!?

Default Image
  • நாட்டு மக்களின் எதிர்பார்ப்பில் பட்ஜெட் இருக்குமா.?
  • வங்கிகள் மற்றும் வருமானவரி விலக்கு தொடர்பான எதிர்பார்ப்புகள்

 

நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.இதற்கான முன்னெட்டமாக அன்மையில் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பை ஆரம்பித்தார்.மேலும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் பட்ஜெட் பிப்ரவரி 1 தேதி தாக்கல் செய்ய உள்ளது.தாக்கல் செய்யப்பட உள்ள  இந்த பட்ஜெட் எப்படி இருக்கும் நடுத்தர மற்றும் ஏழைகள் மக்கள்,அன்றாட வேலைக்கு போய் சம்பளம் வாங்குபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் ஆக இருக்க வாய்ப்புள்ளதா.? பொருளாதார மந்தநிலை மற்றும் வீழ்ச்சியை சமாளிக்க  ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை நீதியமைச்சர் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உலக வங்கியானது  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019- 2020 நிதியாண்டில் 5 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை மூலம் மதிப்பிட்டுள்ளது. மேலும் வங்கிகள் மற்றும் வங்கிகள் சாராத நிதி நிறுவனங்கள் ஆனது கடன் வழங்குவது  அன்மைக்காலமாக குறைந்து வருவதும் இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதித்து உள்ளதாக அந்த அறிக்கையில் உலக வங்கி தெரிவித்து உள்ளது. எனினும் அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக உயரம் அதற்கு  வாய்ப்புகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 2020 – 2024ம் ஆண்டில் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.மேலும் அந்த அமைப்பு தெரிவிக்கையில் இது கடந்த 2013 – 2017ம் ஆண்டின் சராசரியான 7.4 சதவிகிதத்தினை விட குறைவு என்று தெரிவித்து உள்ளது.

 

 வருமான வரி விலக்கு குறித்த எதிர்பார்ப்புகள் :-

நாட்டின் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. எனவே வருகின்ற 2020-21 பட்ஜெட்டில் புதிய சலுகைக்கான அறிவிப்புகள் இடம்பெறுகின்ற சாத்தியம் மிக குறைவாக உள்ளது. 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் இருப்பவர்களுகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற் கோரிக்கையும் வைக்கப்படுகிறது.மேலும் நடப்பு 2020-21ஆம் ஆண்டில் ஆண்டு வருவாய் அடுக்கில் 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுபவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளதால்  குறைந்தபட்ச வருமான வரி வரம்பு மாற்றப்படுவதால் இவர்களே அதிக பயன்பெறுபவர்களாக இருப்பார்கள்.

மேலும் தற்போது வீட்டுக்கடன் மற்றும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு ஒரு வேளை உயர்த்தப்பட்டால் வரி விலக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக இந்தியாவின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக முதலீடுகள் குறைந்து உள்ளன குறிப்பிடத்தக்கது.தற்போது நாட்டு மக்களின் வாங்கும் சக்தி பலவீனமாகி உள்ளது. நிறுவனங்களின் வரி எவ்வாறு குறைக்கப்பட்டதோ அவ்வாறு, பல நிறுவனங்கள் இத்துடன் வருமான வரி வரம்பையும் தளர்த்தி வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்