மளமளவென குறைந்த தங்கம் விலை! உற்சாகத்தில் நகை பிரியர்கள்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து உள்ளது.

சென்னை : தங்கம் விலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.60,000ஐ நெருங்கிய நிலையில். சமீப நாட்களாக ஆறுதல் தெரிவிக்கும் விதமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று, இதுவரை இல்லாத அளவிற்கு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. இதன் காரணமாக நகை வாங்கும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கும் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7,705-க்கும் சவரனுக்கு ரூ. 61,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.102.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025