நாளை & நவ.,24ம் தேதி 2 மணி நேரம் UPI சேவை இயங்காது – HDFC வங்கி அறிவிப்பு.!
நவம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் பராமரிப்புக்காக அதன் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவை தற்காலிகமாக கிடைக்காது என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.
டெல்லி : நாளை (நவம்பர் 5) மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில், எந்தெந்த நாட்களில் எந்த நேரத்தில் சேவை கிடைக்காது மற்றும் எந்தெந்த ஆப்ஸ் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதன்படி, MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik 2 சேவைகளும் மற்றும் HDFC வங்கியில் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் UPI பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டுபரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மணிநேரங்களுக்கு இந்த சேவைகள் தடைப்பட்டிருந்தாலும், அவை முன்பு போலவே மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் HDFC வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 05, 2024 அன்று 12:00 AM IST முதல் 02:00 AM IST வரை (2 மணிநேரம்)
- நவம்பர் 23, 2024 அன்று 12:00 AM IST முதல் 03:00 AM IST வரை (3 மணிநேரம்)
இந்தக் காலகட்டத்தில் உங்களால் எந்த வகையான நிதி மற்றும் நிதி அல்லாத UPI பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது.