59-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல்,டீசல் விலை!

Default Image

சென்னை:59-வது நாளாக எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்,59-வது நாளாக இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை மாற்றமின்றி ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

புது வருட பிறப்பிலும் பெட்ரோல் விலை சதத்தை விட்டு குறையாமல் இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதனால்,இனி வரும் நாட்களிலாவது பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்