புதிய ஹெச்1பி விசா விதிமுறைகளால் யாருக்கு பாதிப்பு..?

Default Image

 

டொனால்டு டிரம்ப் அரசின் புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளின் பாதிப்பு, இந்திய ஐடி நிறுவனங்களையும், ஊழியர்களையும் பயமுறுத்தி வந்த நிலையில், இன்போசிஸ் முன்னாள் உயர் அதிகாரியான மோகன்தாஸ் பாய்க் ஐடி ஊழியர்களுக்குச் சாதகமான ஒரு பதிலை  கூறியுள்ளார்.

அமெரிக்க அரசு அறிவித்துள்ள புதிய ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவிலான பாதிப்பை உருவாக்கும் எனக் கருதப்பட்டு வந்தது.  ஆனால் விதிகளை மீறிச் செயல்படும் சில நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பாக அமையும் எனக் கோகன்தாஸ் பாய்த் தெரிவித்துள்ளார்.

புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 7பக்க ஹெச்1பி விசா விதிமுறையில், ஹெச்1பி விசா பெறும் ஊழியர், தான் வேலை செய்யச் செல்லும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரியும் காலத்திற்கு மட்டுமே விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் பணிபுரிய ஹெச்1பி விசாவிற்காக விண்ணப்பிக்கும் ஊழியருக்கு ஒப்புதல் முன்கூடியே அளிக்கப்பட வேண்டும். இதுமட்டும் அல்லாமல் விண்ணப்பதாரர் தான் 3ஆம் தரப்பு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியைச் செய்து கொண்டு இருப்பதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.

விசா வழங்கப்படும் காலத்திற்கு ஹெச்1பி விசா ஊழியருக்கும், 3ஆம் தரப்பு நிறுவனத்திற்கும் இடையில் நேரடியாக ஊழியர் மற்றும் நிறுவனர் என்ற உறவு இருக்க வேண்டும்.
இத்தகைய கட்டுப்பாடுகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் இல்லையெனில் பிரச்சனை பெரிதாக வெடிக்கும். இப்படி விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும் போது எவ்விதமான பிரச்சனைகளும் இருக்காது. ஆனால் சில நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி ஊழியர்கள் பணியில் அமர்த்துகிறது. இத்தகைய நிறுவனங்களுக்குக் கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும்.

அக்டோபர் 1, 2018ஆம் தேதி , 2019ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் துவங்கும். இக்காலகட்டத்திலேயே இப்புதிய ஹெச்1பி விசா விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

அமெரிக்காவில் திறன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் இப்புதிய ஹெச்1பி விசா முறைகளில் தற்காலிக ஹெச்1பி விசா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனைக் கொண்டு அமெரிக்க நிறுவனம் உலக நாடுகளில் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தேர்வு செய்யலாம் எனத் தெரிகிறது.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்