நடுங்க விடும் தங்கம் விலை…சவரனுக்கு ரூ1,120 உயர்ந்து விற்பனை.!

Gold Price: நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் ரூ.50,000-த்தை தொட்ட தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ1,120 உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
நேற்று சவரன் ஒன்று ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (29.03. 2024) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.51,120-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, கிராமுக்கு 6,390 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி, (28.03. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000க்கு விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025