2018 தமிழக பட்ஜெட்:ரு.1,76,251 கோடி 2018-2019 நிதியாண்டுக்கான பட்ஜெட்!
பட்ஜெட்டில் மொத்த வருவாய் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 251கோடி ரூபாயாகவும், மொத்தச் செலவு 2 லட்சத்து இருபதாயிரத்து 731கோடி ரூபாயாகவும், மொத்தப் பற்றாக்குறை 44ஆயிரத்து 480கோடி ரூபாயாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டில் மொத்த வருவாய் 1,76,251கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலத்தின் சொந்த வருவாய் 1,23,917கோடி ரூபாயாகும். வரி வருவாய் ஒரு லட்சத்து 12ஆயிரத்து 616கோடிரூபாயும், வரி அல்லாத வருவாய் 11ஆயிரத்து 301கோடி ரூபாயும் ஆகும். மொத்த வருவாயில் மத்திய அரசிடம் இருந்து பெறப்படுபவை 52ஆயிரத்து 334கோடி ரூபாய் ஆகும்.
இதில் ,பங்கிடப்பட்ட வரிகள் 31ஆயிரத்து 707கோடி ரூபாயும், உதவி மானியம் இருபதாயிரத்து 627கோடி ரூபாயும் ஆகும். 2018-2019 நிதியாண்டில் மொத்தச் செலவு இரண்டு லட்சத்து இருபதாயிரத்து 731கோடி ரூபாயாகும்.
இதில் சம்பளத்துக்கு 52ஆயிரத்து 171கோடி ரூபாய், ஓய்வூதியம் ஓய்வுக்காலப் பயன்களுக்கு 25ஆயிரத்து 362 கோடி ரூபாய், ஊதியமல்லாச் செயல்பாடுகளும் பராமரிப்பும் பத்தாயிரத்து 838கோடி ரூபாய், உதவித்தொகைகளும் நிதி மாற்றங்களும் 75ஆயிரத்து 723 கோடி ரூபாய், ஏனைய வருவாய்ச் செலவினங்கள் 24கோடி ரூபாய். மூலதன ஒதுக்கீடு 28ஆயிரத்து 283கோடி ரூபாய்.
கடனுக்கான வட்டி 29ஆயிரத்து 624கோடி ரூபாய். மொத்தச் செலவைவிட மொத்த வருவாய் 44ஆயிரத்து 480கோடி ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது. 2019மார்ச் 31 அன்று நிகர நிலுவைக் கடன் 3லட்சத்து 55ஆயிரத்து 845கோடியாக இருக்கும். 2018-2019நிதியாண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 9விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.