படிப்படியாக குறையும் தங்கம் விலை.! இன்றைய நிலவரம் இதோ…

GOLD SILVER RATE

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த வார நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டது.

நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1000 குறைந்த நிலையில், இன்றும் ரூ.230 குறைந்துள்ளது. கடந்த திங்களன்று ரூ.47,800 ஆக இருந்த தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

சென்னையில் (06.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.230 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,520க்கும், கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,850க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.5,815க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.81.00க்கும்,  ரூ.81,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதல் விலைக்கு பால் விற்றால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

சென்னையில் நேற்று (05.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46800க்கும், கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.5850க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.2.10 குறைந்து ரூ.81.40க்கும், கிலோ வெள்ளி ரூ.2,100 குறைந்து ரூ.81400க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack