இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : கடந்த மூன்று தினங்களாக மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்ட தங்கம் விலையில், இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல் தங்கம் விலையில் எந்தவித மாற்றமில்லாமல், விலையிலேயே நேற்றுவரை விற்பனையானது. இன்றைய தினம் சவரனுக்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.53,552-க்கும், கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.6,694-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.