இன்றைய (18.11.2023) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலயே விற்கப்படுகிறது. ஆனால், வெள்ளி விலையில் மட்டும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஒரு சவரனுக்கு அதிரடியாக ரூ.520 உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அதன்படி, சென்னையில் (18.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700க்கும் விற்பனையாகிறது. அதேபோல்,வெள்ளி விலையும் மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.79.00க்கும், கிலோ வெள்ளி ரூ.79,000க்கும் விற்பனையாகிறது.
வாரத்தின் 3வது நாளில் ஏற்றமடைந்த சென்செக்ஸ்.! 24 நிறுவங்களின் பங்குகள் உயர்வு.!
(17.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.45,600க்கும், கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,700க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கும், கிலோ வெள்ளி ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.