விலையில் மாற்றமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,745-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலையில் மாற்றமில்லை. கடந்த 21ம் தேதி முதல் இன்று வரை ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,100 க்கும் சவரனுக்கு ரூ.56,800க்கும் விற்பனை ஆகிறது.
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,745-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.99க்கும், கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.