இன்றைய (31.5.2023) பெட்ரோல், டீசல் விலை..!

Indian Oil

375-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 286 அல்லது 4.74% என சரிந்து ரூ.5,750 ஆக உள்ளது. ஆனால், ஒரு வருடம் நிறைவடைந்த நிலையிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

375-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் விலை குறையாத காரணத்தினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்