இன்றைய (29.07.2021) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.23 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,530-க்கு விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ரூ.72.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.72,200-க்கு விற்பனையாகிறது.