இன்றைய (21-02-2024) பெட்ரோல் மட்டும் டீசல் விலை நிலவரம் ..!
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலையை நியமித்து வருகிறது.
இன்று மக்கள் நீதி மய்யம் 7-ம் ஆண்டு தொடக்க விழா..!
அதன் அடிப்படையில் சென்னையில் இன்றும் விலை மாறாமல் நேற்றைய விலைக்கே பெட்ரோல் மட்டும் டீசல் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் வீலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லியிலும் விலைமாற்றம் இல்லாமல் நேற்றைய விலையில் விற்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 96.72-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.62-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.31- க்கும், டீசல் விலை ரூ.94.27-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்றோடு 638 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.