இன்றைய (19.08.24) தங்கம், வெள்ளி விலை நிலவரம்.! ஏற்றமா? இறக்கமா?
சென்னை : 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த சனிக்கிழமை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் (ஞாயிற்றுக் கிழமை) சர்வதேச சந்தை வர்த்தகம் விடுமுறை காரணாமாக சனிக்கிழமை விலையே நீடித்தது.
இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று எந்த வித மாற்றம் இல்லாமல் நேற்றைய விலைலையே விற்பனை ஆகிறது. அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (19-08-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,360-க்கும், கிராமுக்கு ரூ.6,670-க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,000 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,125 ஆகவும் விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.91-க்கும், கிலோவிற்கு ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.