இன்றைய (12.02.2024) தங்கம் – வெள்ளி விலை நிலவரம்.!
சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, ஒரு நாட்டில் தங்கம் வெட்டி எடுக்கும் அளவு, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி, உள்நாட்டு தேவை மற்றும் நுகர்வோர் முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் விலையில் தினம் தினம் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறது.
பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு தினமும் ஏற்றம், இறக்கும் காணப்படும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..!
சென்னையில் (12. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.46,640 ஆகவும், கிராமுக்கு மாற்றமின்றி ரூ.5,830ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77.00-க்கும் ஒரு கிலோ ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.