ஒரே நாளில் ரூ.1,160 குறைந்தது தங்கம் விலை…சரிந்தும் இன்பமில்லா இல்லத்தரசிகள்.!
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. இருந்தாலும், இந்த குறைப்பு இல்லத்தரசிகளை சந்தோஷம் படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.
காரணம் கடந்த காலத்தில் தங்கம் விலை அந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதனால், இந்த சிறிதளவு குறைப்பு திருப்தியை ஏற்படடுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிந்ததால், இங்கும் விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் (22ம் தேதி) கடுமையாக சரிந்துள்ளது. அதற்கு இரான் – இஸ்ரேல் போர் பதற்றம் தணிந்துள்ளதே தங்கம் விலை வீழ்ச்சிக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (23-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600க்கும், கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.86.50க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (22-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845-க்கும் விற்பனையானது. அதே நேரம் வெள்ளி விலையானது ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.89-க்கும், கிலோ வெள்ளி ரூ. 1000 குறைந்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.