gold price [File Image]
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்ததால் நகைப் பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. மே 14ஆம் தேதி ரூ.53,520ஆக இருந்த தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து ரூ.55 ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது மீண்டும் விலை குறையத் தொடங்கியிருக்கிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (23-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையாகிறது. அதெ போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3.30 குறைந்து, ஒரு கிராம் ரூ. 97-க்கும், கிலோவிற்கு ரூ.3,300 குறைந்து ரூ.97,000 -க்கும் வவிற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (22-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.6,860, சவரன் ரூ.54,880-க்கு விற்பனையானது. ஆனால், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து கிராம் ரூ.100.30-க்கும், கிலோவிற்கு ரூ.1300 உயர்ந்து ரூ.1,00,300-க்கும் வவிற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ரூ.10 ஆயிரம் கடந்திருப்பது 2ஆவது முறையாகும்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…