வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை! ஒரு சவரன் 29 ஆயிரத்தை தாண்டியது!

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உயர்வை கண்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.29,440 -க்கு விற்பனையாகிறது.
மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ. 3680 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.49.20-க்கு விற்பனையாகிறது.