6 நாட்களில் ரூ.960 சரிந்த தங்கத்தின் விலை! இன்று சவரனுக்கு ரூ.112 குறைவு
இன்றைய ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 29,160 -க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை கொண்டுதான் உள்ளது.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாயை எட்டியது.இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது.1 சவரன் தங்கம், ரூ. 29,160-க்கு விற்பனையாகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து, ரூ.3645-க்கு விற்பனையாகிறது.இதனையடுத்து வெள்ளி விலை ரூ.80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.50 -க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த 6 நாட்களில் ரூ.960 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.