தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்.! ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை.!

Default Image

22 காரட் ஆபரண தங்கம் கிராம் 1-க்கு4,472ஆக உயர்ந்துள்ளது. இதன் நேற்றைய விலை கிராமுக்கு 4,443 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற தொழில் துவங்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு காரணமாக மீண்டும் தங்க விற்பனை மீண்டும் தொடங்கியுள்ளது.

இத்தனை நாள் தங்கம் வாங்காதவர்கள் தற்போது தங்கள் தேவைக்காக வாங்கி வருகின்றனர். இதனால், அதன் விலை கணிசமாக ஏற்றம் கொண்டுள்ளது. ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ருபாய்  ஏற்றம் கண்டுள்ளது.

22 காரட் ஆபரண தங்கம் கிராம் 1-க்கு4,472ஆக உயர்ந்துள்ளது. இதன் நேற்றைய விலை கிராமுக்கு 4,443 ஆக இருந்தது தற்போது 29 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல 8கிராம் (சவரன்) ஆபரண தங்கவிலை சென்னையில் 35,544 ரூபாயாக உள்ளது. இதன் நேற்றைய விலை 35,776 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 46.70 ரூபாயாக உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 46.60 ரூபாயாக இருந்தது. இன்று ஒரு கிலோ வெள்ளி 46,700 ஆக உள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்