மக்களே தங்கம் வாங்க இதான் சரியான நேரம்…! மிஸ் பண்ணிறாதீங்க…!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து, ரூ.4,841க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே 3-ம் தேதியான நாளை, அட்சயதிருதியை நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். அந்த வகையில், தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை மக்கள் உற்று கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து, ரூ.4,841க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.496 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.2.20 குறைந்து ரூ.67.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.