அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு சரிந்தது..!
அமெரிக்கா டாலருக்கு நிகாரன பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது.
பாகிஸ்தானின் பொருளாதார சரிவினால் அந்நாட்டின் நாணயத்தின் மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மூன்று நாட்களாக நாணயத்தின் மதிப்பு குறைந்து வந்த தருணத்தில் தற்பொழுது அமெரிக்க டாலருக்கு எதிராக 270 என்ற வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. வீழ்ச்சியின் தொடர்ச்சியாக மூன்றாவது நாளில் அமெரிக்க டாலருக்கு எதிராக 270.10 PKR ஆக இதுவரை இல்லாத அளவிற்கு நாணயத்தின் மதிப்பு 7.50 PKR (2.77%) ஆக குறைந்துள்ளது.
கடந்த புதன் கிழமை இருந்த நாணயத்தின் மதிப்புடன் ஒப்பிடும் பொழுது 230.89 PKR, மூன்று நாட்களில் 39.21 PKR (14.50%) குறைந்துள்ளது. பொருளாதார சரிவினால் கிரீன்பேக் ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகமாகியதும் மற்றும் அதன் விநியோகம் குறைந்ததால் இந்த மதிப்பிழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்த வளர்ச்சி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.
நாடு கடனைத் தவிர்க்க சர்வதேச நிதியத்திடம் இருந்து நிதியை பெறுவதற்கு எதிர்பார்ப்புடன் உள்ளது. ஆனால் சர்வதேச நிதி நிறுவனம் சில உறுதியான சீர்திருத்தங்களைக் கூறியுள்ளது. இந்த சீர் திருத்தங்களில் பெட்ரோல் விலை அதிகரிப்பும் அடங்கும். இதனால் பாகிஸ்தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 35 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.